tamilnadu

தீபாவளி பண்டிகை: வழக்கம் போல் வெறிச்சோடிய திருப்பூர் பத்து நாட்கள் விடுமுறை விட்ட பனியன் தொழிற்சாலைகள்

தீபாவளி பண்டிகை: வழக்கம் போல் வெறிச்சோடிய திருப்பூர் பத்து நாட்கள் விடுமுறை விட்ட பனியன் தொழிற்சாலைகள்

திருப்பூர், அக். 21 - தீபாவளி பண்டிகை சமயம் பனி யன் மற்றும் சார்பு ஆலைகள் விடு முறை விடப்பட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் திருப்பூர் மாநகரம் வெறிச்சோடிக் காணப்படும். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பூர் மற்றும் சுற்று  வட்டார பனியன் தொழில் வட்டா ரங்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. பின்னலாடைத் தொழில் நகர மான திருப்பூரில் வேலை செய்யும் தொழிலாளர்களில், வெளி மாவட் டங்கள் மற்றும் வெளி மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் தான் அதி கம். வழக்கமாக நேரம், காலம் பார்க்காமல் கடுமையாக உழைக் கக்கூடிய இந்தத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு இரு முறை குறிப்பாக பொங்கல் பண்டிகை மற்றும் தீபா வளி பண்டிகை சமயம் மட்டும் ஒரு  வார காலத்திற்கு விடுமுறை எடுத்து  சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டு வருவார்கள். அதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை சமயத்திலும் லட்சத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர்.  தீபாவளி பண்டிகை திங்க ளன்று முடிந்த நிலையில், செவ் வாயன்றும் அரசு விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி  மாணவ, மாணவிகள் இருக்கக் கூடிய குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் செவ்வாயன்று அல்லது புதன் காலை திருப்பூர் திரும்பி  விடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதேசமயம் குழந்தைக ளுக்கு பள்ளி நடைபெற்றாலும், பனியன் மற்றும் சார்பு தொழிற் சாலைகள் இயங்காது. எனவே  தொழிலாளர்களுக்கு வேலை இருக்காது. எனவே சில குடும்பத் தார் இந்த வாரம் முழுவதும் சொந்த  ஊர்களில் இருந்து விட்டு அடுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான்  திருப்பூருக்குத் திரும்புவார்கள். இந்த ஆண்டு, தீபாவளியை யொட்டி நீண்ட விடுமுறைக்கு முக் கியக் காரணம், அமெரிக்க அரசு  விதித்துள்ள 50 சதவிகித அபராத  வரிதான். கடந்த இரு மாதங்க ளாகவே ஏற்றுமதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், டையிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் வேலை மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஆயுத பூஜை  சமயத்திலேயே பலர் ஊர்களுக் குச் சென்றுவிட்டனர். வழக்கமாக திருப்பூர் பின்னலா டைத் தொழில் நல்ல நிலையில்  நடைபெறும்போது, தொழிலாளர்க ளுக்கு உற்பத்தி நிறுவனங்களில் விடுமுறை தருவதில் கெடுபிடி காட்டுவார்கள். தீபாவளிக்கு முதல்  நாள் இரவு வரை வேலை வாங்கிக்  கொண்டு, கடைசி நிமிடத்தில் போனஸ் கொடுத்து அனுப்புவார் கள். ஆனால் இந்த ஆண்டு அது போன்ற நிலைமை இல்லை. பல  நிறுவனங்களில் கடந்த பல வாரங்க ளாக வேலை இல்லாத நிலையில் முன்கூட்டியே தொழிலாளர்களை அனுப்பி விட்டதுடன், ஓரளவு  வேலை இருந்த நிறுவனங்களிலும் தற்போது தீபாவளி பண்டிகை சம யம் போனஸ் கொடுத்து அனுப்பி விட்டனர். சில நிறுவனங்கள் இந்த  வாரம் வெள்ளிக்கிழமை வரை விடு முறை என்று அறிவித்து தொழிலா ளர்களை அனுப்பி உள்ளனர். வழக்கமாக தொழிலக உரிமை யாளர்கள் ஓரிரு நாட்கள் மட்டும்  விடுமுறை கொடுத்து அனுப்பினா லும் தொழிலாளர்கள் குறைந்தபட் சம் ஒரு வாரம் கழித்துத் தான்  வேலைக்கு வருவார்கள். ஆனால்  இம்முறை தொழிலக உரிமையா ளர்களே பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டனர். திருப் பூர் வரலாற்றில் இதுவரை இது  போன்ற நிலைமை இருந்ததில்லை.  வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள் ளதன் அறிகுறிதான் இது என்று தொழிலாளர்கள் கூறினர். இம்முறை தமிழ்நாட்டு தொழி லாளர்கள் மட்டுமின்றி பீகார், ஜார் கண்ட், ஒடிசா உள்ளிட்ட வட மாநி லத் தொழிலாளர்களும் பெருமளவு  சொந்த ஊர்களுக்கு ரயிலில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். வேலை அதிகமாக இருந்தால் அவர்களுக்கு விடுமுறை கிடைக் காது. ஆனால் இப்போது, போதிய  ஆர்டர்கள் இல்லாத நிலையில் தீபா வளி பண்டிகைக்கு நிறுவனங்க ளில் விடுமுறை அறிவித்து தொழி லாளர்களை அனுப்பி வைத்துள்ள னர். மீண்டும் எப்போது வருவது என்றும் அவர்களுக்கு பல நிறு வனங்களில் திட்டவட்டமாகத் தெரி விக்கவில்லை. எனவே அந்த தொழி லாளர்களும் வெளியேறிச் சென்று  விட்டதால் திருப்பூர் இந்த ஒரு வார  காலத்திற்கு வெறிச்சோடி காணப் படும். இது மீண்டும் சுறுசுறுப்புப் பெறுமா? அல்லது மந்த நிலை யில் நீடித்திருக்குமா? என்பது அடுத்த இரு வார காலத்தில் தெரி யும்.