tamilnadu

img

கனமழை எதிரரொலி – அருவிகளில் குளிக்கத் தடை

கனமழை எதிரரொலி – அருவிகளில் குளிக்கத் தடை

உடுமலை, அக்.21- கனமழையின் காரணமாக உடுமலை திரு மூர்த்தி மலை அருகே உள்ள பஞ்சலிங்க  அருவி மற்றும் கோவை குற்றாலம் ஆகிய  பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை  கருத்தில் கொண்டு மேற்கண்ட அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.  கடந்த மூன்று நாட்களாக உடுமலை திரு மூர்த்திமலை அடிவாரத்தில் பெய்து வரும்  தொடர் மழையால், பஞ்சலிங்க அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஆர்ப்ப ரித்து செல்கிறது. இதன் காரணமாக பஞ்ச லிங்க அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்தும் தற்காலிகமாக அருவி மூடப் படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள் ளனர். இதேபோல மலை அடிவாரத்தில இருக்கும் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்த  காணப்படுவதால், கோவிலுக்கும் பக் தர்கள் செல்ல தடைவிதிக்கபட்டு உள்ளது. கோவை குற்றாலம் இதேபோன்று, கோவை மாவட்டத் திற்கு ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்ட தாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையாலும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குளிக்க அனுமதி மறுக்கபட்டுள்ளது. மேலும் பண்டிகை காலம் என்பதால் பொது மக்கள் பார்வைக்கு மட்டும் பழைய பார்க் கிங் முதல் இரும்பு பாலம் வரை நடைப் பயண மாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக  போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் தெரி வித்துள்ளார்.