தனியார் மதுபானக்கூடத்திற்கு எதிர்ப்பு
நாமக்கல், அக். 21- நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உயர் ரக மதுபானக்கூடத்திற்கு பொதுமக்கள் மத் தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகரின் மையப்பகுதியில், மருத்துவமனைகள் மற்றும் குடியி ருப்புப் பகுதிகள் நிறைந்து உள்ளது. இந்த இடத்தில் இந்தத் தனியார் மதுபானக்கூடம் திறக்கப்பட்டுள்ள தால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்ப டும் இந்தக் கடையில், அண்மையில் தீபாவளியை யொட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான மதுப்பிரியர்கள் குவிந்தனர். மேலும் இந்தஇடம் சேலம்-ஈரோடு பிரதான சாலை என்ப தால், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படு கிறது. இந்நிலையில், செவ்வாயன்று தனியார் மதுபானக் கூடத்திற்கு மது அருந்த வந்த சில நபர்கள், அதிகளவு மது அருந்தியதால் சாலையில் ரகளையில் ஈடுபட்டனர். இவர்கள் சாலையில் செல்பவர்களிடம் அத்துமீறிய தோடு, சாலையின் குறுக்கே படுத்துக்கொண்டும், மது பாட்டில்களை உடைக்க முயன்றும் அலப்பறையில் ஈடு பட்டனர். மேலும், மது அருந்த வந்த நபர்களில் ஒருவர் நிதானம் இன்றி மதுக்கடையின் நடைபாதையிலேயே படுத்துக் கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார், ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்களை அங் கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்த னர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், பொது மக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையூ றாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் தனியார் மதுபானக் கூடத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கடும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஞ்சாப் போதையில் சிறுவன் வெறியாட்டம் கத்தியால் மிரட்டி தாக்கிய வீடியோ வைரல்
கோவை, அக்.21- மேட்டுப்பாளையம் அருகே ஆலங்கொம்பு பகுதி யில் 17 வயது சிறுவன் கஞ்சாப் போதையில் ஈடுபட்டு, விபத்தை ஏற்படுத்திவிட்டு, பொதுமக்களை கத்தியால் மிரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஆலங்கொம்பு பகுதியில் திங்களன்று இரவு, தீபாவளி கொண்டாட்டத்தின் போது, 17 வயது சிறுவன் கஞ்சாப் போதையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற பிரசாத் என்பவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளான். இதனைக் கண்ட அருகில் இருந்த வர்கள், சிறுவனை துரத்திச் சென்று, வீராசாமி நகர் பகுதியில் அவனது வாகனத்தை நிறுத்த வைத்தனர். ஆனால், தன்னைப் பின் தொடர்ந்தவர்களைக் கண்ட சிறுவன், தன்னிடமிருந்த கத்தியை எடுத்து, அவர் களைச் சரமாரியாகத் தாக்கியதுடன், ஆபாச வார்த்தை களால் திட்டியுள்ளான். மேலும், இந்தச் சம்பவத்தை செல்போனில் பதிவு செய்தவர்களை கத்தியால் மிரட்டி, அவர்களின் செல்போன்களைப் பறித்து உடைத்துள் ளான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறுவன், அவர்களையும் தாக்க முயன்றதுடன், “யாராவது தன் னைப் பிடிக்க முயன்றால் தற்கொலை செய்து கொள் வேன்” என மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள் ளான். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய சிறுவனை காவல்துறையினர் தேடி வரு கின்றனர். மேலும், சிறுவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் ஆலங்கொம்பு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கஞ்சாப் போதையில் சிறுவன் பொதுமக்களை கத்தி யால் மிரட்டி, தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்க ளில் வைரலாகி நெட்டிசங்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
பட்டாசு வெடிப்பதில் விதி மீறல்: 36 பேர் மீது வழக்கு
கோவை, அக். 21- பட்டாசு வெடிப்பதற்கு நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டி ருந்த நிலையில், விதிகளை மீறி கோவை மாந கரில் பட்டாசு வெடித்த 36 பேர் மீது கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்த னர். கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை திங்களன்று உற்சாகமாக கொண்டாடப்பட் டது. பட்டாசு வெடிப்பதற்கு நேரங்கள் ஒதுக் கப்பட்டு இருந்து, மேலும் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டு மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் போலீஸ் எச்சரிக்கையையும் மீறி இரவு குறிப் பிட்ட நேரத்தை தாண்டி வெடிகளை வெடித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாநகரில் 36 பேர் மீது விதிகளை மீறி வெடி வெடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆர். எஸ். புரம், வடவள்ளி, ராமநாதபுரம், பீளமேடு, சிங்காநல்லூர், துடியலூர், கவுண்டம்பாளை யம், செல்வபுரம், சுந்தராபுரம், உள்ளிட்ட பகு திகளில் தடையை மீறி வெடி வெடித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர் கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
அரசு பேருந்து விபத்து
பொள்ளாச்சி, அக். 21- பழனியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து பொள்ளாச்சி அருகே விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப் பாக பயணிகள் காயமின்றி தப்பினர். பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி பகுதியில் செவ்வா யன்று, பழனியில் இருந்து கோவை நோக்கிச் அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் சென்டர் மீடியத்தில் மோதியது. இதில், பயணிகள் 80 பேர் பேருந்தில் இருந்தனர். நல்வாய்ப் பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து காரணமா கப் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. கோமங்க லம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு, அக். 21- பவானிசாகர் அணை முழு கொள்ள ளவை எட்டியுள்ள நிலையில் முன்னதாக வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணை யின் கடந்த ஞாயிறன்று 99.99 அடியாக இருந் தது. திங்களன்று காலை 101.20 அடியாகவும், பகல் 12 மணியளவில் 101.36 அடியாக உயர்ந்தது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக விரைவில் அணையின் நீர்மட் டம் முழு கொள்ளவான 102 அடியை எட்ட லாம் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து காரணமாக 10 ஆயிரம் கன அடி வரை நீர் திறப்பு இருக்கும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வா யன்று காலை 8 மணி நிலவரப்படி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர்வ ரத்து 9 ஆயிரத்து 400 கன அடியாக இருந்தது. எல்பிபி வாய்க்காலில் 1000 கன அடியும் திறக்கப்படுகிறது. ஆற்றில் 8400 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.