tamilnadu

img

நீலகிரி மலை ரயில் பாதையில் ராட்சத பாறைகள் வெடிவைத்து அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரம்

நீலகிரி மலை ரயில் பாதையில் ராட்சத பாறைகள் வெடிவைத்து அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரம்

உதகை, அக்.21- நீலகிரி மலை ரயில் பாதையில் மண் சரிவால் விழுந்த ராட்சத பாறைகளை ரயில்வே ஊழியர்கள் வெடிவைத்துத் தகர்த்து பாதை யைச் சீரமைக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த,  உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான நீலகிரி மலை ரயில் சேவை மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் வரையும் தினசரி  இயக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழிலை ரசிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இந்த மலை  ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி களில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக, மலை ரயில்  பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, ராட் சத பாறைகளும் விழுந்துள்ளன. இதனால், கடந்த மூன்று நாட்களாக  மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள் ளது. மலை ரயில் கடந்து செல்லும் அடர்லி மற்றும் ஹெல்க்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையிலான இருப்புப் பாதையில், மண் சரிவை  அகற்றும் பணி துரித கதியில் நடை பெற்று வருகிறது. அவ்வப்போது மழை குறுக்கிட்டாலும், 30-க்கும் மேற் பட்ட ரயில்வே பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இருப்புப் பாதை யில் விழுந்துள்ள ராட்சத பாறை களை முழுமையாக அகற்ற முடியாத தால், அவற்றை ஊழியர்கள் வெடி வைத்துத் தகர்த்தனர். மேலும், ஜேசிபி இயந்திரங்களின் உதவியு டன் பாறைகள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, மலை  ரயில் சேவை வழக்கம் போல இயக் கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது. இருப்புப் பாதையில் விழுந்த ராட்சத பாறைகளை ஊழி யர்கள் வெடிவைத்து தகர்க்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள் ளன.