2018இல் திருத்தப்பட்ட ‘ஊழல் தடுப்புச் சட்டம்’ அரசியலமைப்பிற்கு விரோதமானது
புதுதில்லி 2018ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாக ரத்னா, நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அமர்வு செவ் வாயன்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி விஸ்வநாதன்,”1998இன் பிரிவு 17 ஏ-ஐப் படித்துப் பார்ப்பதன் மூலம் அது அரசிய லமைப்பின் சட்டப்பூர்வத்தன்மையை நிலை நிறுத்துகிறது. ஆனால் விசாரணைக்கான முன் அனுமதி குறித்த கேள்வியை நிர்வாகக் கட்டுப் பாட்டிலிருந்து விடுபட்ட லோக்பால் அல்லது லோக்ஆயுக்தாவால் தீர்மானிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் அல்ல” என தீர்ப்பு வழங்கினார். ஆனால் நீதிபதி பி.வி. நாகரத்னா,”2018இல் திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988இன் பிரிவு 17 ஏ அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் அவர் மேலும் கூறுகையில்,”நம் நாட்டின் இளை ஞர்களும் குழந்தைகளும் தங்கள் பெற்றோர்கள் வருமானத்திற்கு அப்பால் ஊழல் மூலம் சம்பா திக்கும் செல்வத்தை தவிர்க்க வேண்டும். அது தேசத்திற்கு செய்யும் ஒரு சிறந்த சேவையாக இருக்கும். ஒருவரின் பேராசை மற்றும் பொறா மை மனப்பான்மையைக் கட்டுப்படுத்தி, மனதிலி ருந்து அழிக்க வேண்டும். இல்லையெனில், வரு மானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்ப்பதற்கு வழிவகுக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை குறைக்கவோ அல்லது நமது நிர்வாகத்திலிருந்து அகற்றவோ முடியாது. இதன் விளைவாக பொருள் சார்ந்த ஆசையில் இருந்து விடுபட்டு தேசத்திற்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த வைக்கும்” என தீர்ப்பு வழங்கினார். நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினாலும், ஊழலுக்கு எதிரான நீதிபதி பி.வி. நாகரத்னாவின் தீர்ப்பு கவனத்தை ஏற் படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.