ஒன்றிய அரசே இந்தித் திணிப்பைக் கைவிடுக; கல்வி
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கத் திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, தமிழக மாணவர்கள் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் பங்கேற்று, ஒன்றிய அரசின் குலக்கல்வி, இந்தித் திணிப்பு, யுசிஜி விதி களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பை யும், அவர்களின் பல்துறை முன்னேற்றத்தை யும் குலைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு மறைமுகமாக இறங்கியிருக்கிறது. இதற்காக, சமூகநீதிக்கு எதிரான, குலக்கல்வி மற்றும் இந்தித் திணிப்பை
மாணவர்கள் போராட்டம்...
உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 152 கோடியைத் தருவோம்; இல்லா விட்டால், 43 லட்சம் மாணவர்க ளின் கல்வி சீரழிந்தாலும் அதைப் பற்றி எங்களுக்கு அக்கறை யில்லை என்ற அளவிற்கு தமிழக மாணவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே அறிவித்தி ருக்கிறது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை- இந்தித் திணிப்பைக் கண்டித்தும், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக்ஷா அபியான்) தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 2 ஆயி ரத்து 152 கோடி ரூபாயை உடனடி யாக வழங்க வேண்டும். மாநி லங்களின் உரிமையைப் பறிக்கும் யுஜிசி வரைவு அறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாணவர் இயக்கங்கள், செவ்வாயன்று மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாணவர் இயக் கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்க ளில் திமுக மாணவரணித் தலை வர் ராஜீவ்காந்தி - கோவை யிலும், இந்திய மாணவர் சங்கத் தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது - தென்சென்னை யிலும், இந்திய மாணவர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி - கும்பகோணத்தி லும், மத்தியக்குழு உறுப்பினர் சி. மிருதுளா - மத்தியசென்னை யிலும், திராவிடர் கழக துணைப் பொது ச்செயலாளர் பிரின்ஸ் என்னெரசு பெரியார் - மத்தியச் சென்னையிலும், மாணவரணி செயலாளர் செந்தூர் பாண்டியன்- தஞ்சையிலும், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற செயலாளர் தினேஷ் - திண்டுக்கல்லிலும் கலந்து கொண்டனர். சென்னை யில் 6 மையம் உள்பட மாநிலம் முழுவதும் 60 மையங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.