12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, ஆ.ஜோசப் அன்னையா, எம்.ஜெயகாந்தன், ஜி.சீனிவாசன், சகேயு சத்யகுமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், பொருளாளர் சுமதி, துணைத் தலைவர் வேலு, ஆசிரியர்கள் மா.சிநேகலதா, செ.நா.ஜனார்த்தனன், பா.ரவி (ஓய்வூதியர் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எல்.அனந்தகிருஷ்ணன், சு.ரமேஷ், எஸ்.கே.அனந்தகிருஷ்ணன், கே.அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மலர்வழி, மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஆ.லட்சுமிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பா.பாலமுருகன், ஏ.நரசிம்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில துணை பொது செயலாளர், ஜெ.ஸ்ரீதர், ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்டச் செயலாளர் து.கார்த்திகேயன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஜோசப் கென்னடி, கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் வே.பர்சிலா வான சாஸ்திரி, ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சேகர், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கே.ஆர்.பிரபாகரன், செயலாளர் செ.சரவணன், பொருளாளர் இ.மின்னி செலினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கர் தலைமையில் கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் அரிகிருஷ்ணன், மணவாளன், சாந்தகுமார், தனசேகரன், மணிவண்ணன், இளங்கோவன், மாவட்டத் தலைவர் ரமேஷ், அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பாலமுருகன், தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு மாநிலப் பொருளாளர் தயாளன், தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் தெரசா கேத்ரின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.