tamilnadu

img

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சீனிவாசன், எம்.மேகநாதன், பி.குமாரசாமி, சி.முகமது உசேன், கே.பூங்குழலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா

கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்ற வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.25) கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தென்சென்னை கிளை-1ன் தலைவர் டி.பண்டாரம் பிள்ளை தலைமையில்  சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், கிளைச் செயலாளர் எஸ்.குமார், பொருளாளர் எஸ்.பழனி உள்ளிட்டோர் பேசினர்.