பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துக
பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் (பிப் 25) திருவள்ளூர் டோல்கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சா.தாஸ், சா.ஞானசேகரன், காத்தவராயன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.திவ்யா, ராஜாஜி, பாலசுந்தரம், கபூர், கணேசன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். க.வெண்ணிலா, மணிகண்டன்(அரசுஊழியர்சங்கம்), எஸ்.காந்திமதிநாதன் (ஊரகவளர்ச்சித்துறை) உட்பட பலர் பேசினர்.
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (பிப்.25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன், துரை.மருதன் ஆகியோர் தலைமையில், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் டி.ஆர்.ஜான் வெஸ்லி, தாமோதரன், மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள், நாராயணசாமி, வெங்கடேசன், ஜெய்சங்கர்,பாலாஜி, வெ.லெனின், கிருஷ்ணமூர்த்தி, எம்.ஆர்.திலகவதி உள்ளிட்ட பலர் பேசினர்.