tamilnadu

img

மார்ச் 9 கொடுக்கன் பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் போராட்டம்

மார்ச் 9  கொடுக்கன் பாளையத்தில் நிலம் கையகப்படுத்தும் போராட்டம்  

கொடுக்கன் பாளையம் பகுதியில் விவசாயிகள் பல ஆண்டுகாலம் வளர்த்து வந்த முந்திரி மரங்களை, நிலத்தை கையகப்படுத்துவதாக கூறி  மரங்களை உயிரோடு  பிடுங்கி எறிந்த இடத்தை, மீண்டும் கையகப் படுத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. கொடுக்கன் பாளையத்தில் மக்கள் அனுபவித்து வந்த விலை நிலங்களில் இருந்த முந்திரி மரங்களை மாவட்ட நிர்வாகம் பிடுங்கி எரிந்த நிலையில்,  விவசாய சங்கத் மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமையில் அந்த கிராமத்தில் நேரில் சந்தித்து பார்வை யிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். கடலூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளைக்கரை ஊராட்சி மலை யடிகுப்பம், வெ.பெத்தாங்குப்பம், கொடுக்கம்பாளையம், கீரப்பாளை யம், கட்டாராச்சாவடி உள்ளிட்ட கிரா மங்களில் 200 ஆண்டுகளுக்கு மேலாக 155 ஏழை விவசாய குடும்பங்கள், 164 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை மலைப்பகுதி யில் பண்படுத்தி பயிர் செய்து வந்த னர். குறிப்பாக முந்திரி, வாழை, கரும்பு மலை பயிர்கள், பூக்கள் உள்ளிட் டவை பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம்  கடலூர் மாவட்ட வருவாய் துறையினர்  நில ஆக்கிரமிப்பாளர்கள் என  கூறி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.  அந்த நோட்டீசிற்கு உரிய பதில் அளித்த பின்னர் மீண்டும் முன் தேதி யிட்டு நோட்டீஸ் வெளியிட்டு அதை விவசாயிகளுக்கு நேரடியாக கொடுக் காமல் விநியோகம் செய்ததாக பொய் சொல்லி கடந்த 29.1.2025 அன்று  500 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறையினர்  20 க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம்   முந்திரி மரங்களை உயிரோடு பிடுங்கி எரிந்தனர்.  தடுக்க முற்பட்ட விவசாய சங்க தலைவர்களையும் அரசியல் கட்சியின ரையும் தரக்குறைவாக பேசி காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட கிராமங் களில் உள்ள 22 பெண் விவசாயிகள் பெயரில் மனுதாக்கல் செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தடை யாணை பெறப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சியர் முடி வெடுக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டிருந்தது. ஆனால் இன்று வரை மாவட்ட ஆட்சியர் அது குறித்து எந்த முடிவும் அறிவிக்கவில்லை.  இந்நிலையில் செவ்வாயன்று (பிப்.25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மாநில தலை வருமான பெ.சண்முகம், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லி பாபு, சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.ஆர். ரவிச் சந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், துணைத்தலைவர் எஸ்.தட்சணாமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பி னர் ஆர்.ஆள வந்தார், ஸ்டீபன் ராஜ் உள்ளிட்ட விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் மலை அடிக்குப்பம் கிரா மத்தில் பிடுங்கி எறியப்பட்ட காய்ந்த  முந்திரி மரங்களையும் பார்வை யிட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயி களுடன் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். மார்ச் 9ந்தேதி எந்த நிலத்திலி ருந்து முந்திரி மரங்கள் பிடுங்கப்பட் டதோ, அதே நிலத்தில் மீண்டும் முந்திரி கன்றுகள் நட்டு, நிலத்தை கையகப்படு த்தும்  போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போராட் டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.