சென்னை, டிச. 30 - சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர். வெளியே கசிந்ததற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று தேசிய தகவல் மையமே விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த நபரை தாக்கி, அவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளான மாணவி, காவல் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் தகவலை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், மாணவியின் அடை யாளத்தை வெளிப்படுத்தும் விதமாக எப்.ஐ.ஆர் நகல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, எப்.ஐ.ஆர் நகலை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது. சமூக வலைத்தளங்களில் அகற்றவும் உத்தரவு பிறப்பித்தது. சென்னை காவல்துறை ஆணை யர் அருண், “பெண்களுக்கு எதி ரான குற்றங்கள், மற்ற சில குற்றங் களுக்கு எப்.ஐ.ஆர். பதிவு செய்யும் போது சி.சி.டி.நெஸ் ஆட்டோ மேட்டிக்காகவே இணையத்தில் முடக்கப்பட்டு விடும். இந்நிலையில், ஐ.பி.சி. சட்ட மானது, (ஒன்றிய அரசு அண்மையில் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய) பி.என்.எஸ். சட்டமாக மாறும்பொழுது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக எப்.ஐ.ஆரை முடக்கு வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தாமதமான நேரத்தில் ஒரு சிலர் எப்.ஐ.ஆரை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதன் வழியாக இந்த எப்.ஐ.ஆர். வெளியாகி இருக்கலாம் எந்த எப்.ஐ.ஆர். பதிவு செய்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நகல் வழங்கப்படும். அவ்வாறு வழங்கு வது கட்டாயம் ஆகும். இந்த இரண்டு வழிகளில் தான் ஏதாவது ஒரு வழியில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். எனினும், எப்.ஐ.ஆர். வெளியான தற்கு பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே தான், எப்.ஐ.ஆர். எவ்வாறு கசிந்தது என தேசிய தகவல் மையமே விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஐபிசி குற்றவியல் சட்டத்தில் இருந்து பிஎன்எஸ் குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் தான் எப்.ஐ.ஆர் வெளியானது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளான 64, 67, 68, 70, 79 ஆகிய அனைத்துமே பெண்கள் வன்கொடுமை தொடர்பானவை என்றும், இந்த பிரிவுகளில் ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யும் பட்சத்தில், புகாரளிப்பவர் மட்டுமே அந்த எப்.ஐ.ஆரை பார்க்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.