சென்னை,ஜனவரி.02- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போனஸ் மற்றும் மிகை ஊதியம் வழங்குவதற்காக ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சி மற்றும் டி பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ. 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.