games

img

தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு!

புதுதில்லி,ஜனவரி.02- தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனைகள் துளசி மதி முருகேசன், நித்யஸ்ரீக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் துளசி மதி முருகேசன் வெள்ளி பதக்கமும், நித்யஸ்ரீ சுமதி வெண்கலப்பதக்கமும் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 34 பேருக்கு ஆர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 17ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் வீரர், வீராங்கனைகளுக்குக் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார்.