கேரள ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.
கேரளம், பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, கேரள ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் ஆளுநராக ஆரிஃப் முகமது கான், மணிப்பூர் ஆளுநராக அஜய் பல்லா, ஒடிசா ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டி மற்றும் மிசோரம் ஆளுநராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் நிமியக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரள ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துக்கொண்டார்.