தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் : முதல்வர் அறிவிப்பு
விருதுநகர் விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 6 தொழி லாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். நாக்பூர் உரிமம் விருதுநகர் அருகே உள்ளது பொம்மையாபுரம். இங்கு சிவகாசி ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை இயங்கி வரு கிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலை 84 அறைகள் கொண்ட தாகும். இந்த ஆலையை நடத்தி வந்த சிவகாசியைச் சேர்ந்த வனிதா, பின்னர் அதனை மீனாட்சிசுந்தரம் என்ற மற்றொருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது வரை பட்டாசு தயார் செய்யப்படுவதற்கான உரிமம் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
திடீர் வெடிவிபத்து
இந்நிலையில், சனிக்கிழமை காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வழக்கம் போல வேலைக்கு வந்தனர். அப்போது, பட்டாசுக்கான வேதிப் பொருட்கள் தயாரிக்கும் அறையில் திடீரென வெடிவிபத்து ஏற் பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வெடிச் சத்தம் கேட்டவுடன் பணியில் இருந்த தொழிலாளர்கள், அலறி அடித்துக் கொண்டு ஆலையை விட்டு தப்பியோ டினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆலையின் பிற அறைகளுக்கு தீ பரவிவிடாமல் கட்டுப்படுத்தினர். மேலும், இடிபாடுக ளுக்குள் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை, சக தொழிலாளர்களின் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
6 பேர் பலி
இந்த வெடிவிபத்தில் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணி யன் மகன் சிவகுமார் (56), குருந்த மடத்தைச் சேர்ந்த கோபால் மகன் வேல் முருகன் (54), அதே பகுதியைச் சேர்ந்த சுப்பு என்பவரது மகன் காமராஜ் (54), பொம்மையாபுரத்தைச் சேர்ந்த இராம சாமி மகன் கண்ணன் (54), அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் மகன் மீனாட்சிசுந்தரம் (46), செட்டிக் குறிச்சியைச் சேர்ந்த இராஜாமணி மகன் நாகராஜ் (37) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயம் மேலும் இந்த விபத்தில் ஆவுடையா புரத்தைச் சேர்ந்த முகமது சுதீன்(21) என்பவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட காவல்துறையினர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவ ருக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வச்சக்கா ரப்பட்டி காவல்துறையினர்வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிஐடியு தலைவர்கள் ஆறுதல் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி யான தொழிலாளர்களின் குடும்பத்தி னரை சிஐடியு பட்டாசு - தீப்பெட்டித் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சி. பாண்டியன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி. ராமர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல். முருகன், தெற்கு ஒன்றியச் செயலா ளர் பி. நேரு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு இந்நிலையில், விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், உயிரிழந்த தொழிலாளர்க ளின் உடல்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகை யில், “விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. முறையான பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பட்டாசு ஆலையில் வேலைக்கு பயன்படுத்த வேண்டும். பயிற்சி இல்லாதவர்களை வேலைக்கு பயன்படுத்தியதாக தக வல்கள் வருகின்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் இதனிடையே, பொம்மையாபுரம் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும் பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவார ணம் அறிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சி.பாண்டியன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு 16 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிவிபத்துக்களை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலைகளை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். சனிக்கிழமை வெடி விபத்து நடந்த சாய்நாத் பட்டாசு ஆலையை, வனிதா என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. அதன் உரிமம் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இருந்த போதும் தொடர்ச்சியாக பட்டாசு ஆலையில் உற்பத்தி நடைபெற்றுள்ளது. எனவே, அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் ஆலை இயங்குவதற்கு வாய்ப்பில்லை. விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு விதிமீறல்களே காரணமாகும். எனவே, பட்டாசு ஆலைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசு நிர்வாகமோ, ‘கண்காணிப்புக் குழு’ என்ற பெயரில் லஞ்ச வேட்டையில் இறங்கி வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதமே இந்த வெடி விபத்து நடந்திருப்பது மிகவும் சோகமான நிகழ்வாகும். 6 தொழிலாளர்கள் உடல் கருகி இறந்துள்ளனர். இதுபோன்று விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி அரசு நிர்வாகம் ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு எம்.சி. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் மாநில மாநாடு இரங்கல் விருதுநகர் அருகே நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 6 பேர் பலியான துயரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு அதிர்ச்சியும், வேதனையும் தெரி வித்துள்ளது. உயிரிழந்த தொழிலா ளர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.