tamilnadu

img

அரசின் உரையை படிக்க மறுத்து ஆளுநர் ரவி மீண்டும் அராஜகம்

சென்னை, ஜன. 6 - சட்டப்பேரவையில் தமிழக  அரசின் உரையை வாசிக்க மறுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் அவமதித்துள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன்  தொடங்குவது மரபு. அதன் அடிப்படையில் இந்தாண்டு கூட்டத் தொடர் திங்களன்று (ஜன.6) ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பேரவையில் உரையாற்ற வருமாறு, கடந்தவாரமே சட்டப் பேர வைத் தலைவர் மு. அப்பாவு, ஆளு நரை நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.  அதன்படி திங்களன்று காலை பேரவையில் உரையாற்ற வந்த ஆளுநருக்கு மாநில அரசு சார்பில் காவல்துறையின் “God of Honor” எனும் அரசு மரியாதையுடன் முறைப் படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரவைத் தலைவர் அப்பாவு, பேர வையின் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் ஆளுநரை முன்னின்று வரவேற்று அவைக்குள் அழைத்துச் சென்றனர். பேரவைக்குள் சென்றவுடன் சரி யாக காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் உரையை ஆளுநர் படிக்கத் தொட ங்குவார் என்று அனைவரும் எதிர் பார்த்த நிலையில், ஆளுநர் அப்படியே நின்று கொண்டிருந் தார். இது சட்டமன்ற உறுப்பினர் கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத் தியது. அரசின் உரையை வாசிக்கா மல் ஆளுநர் நின்றது, சட்டப்பேர வை அவமதிக்கும் செயல் என்ப தால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அவர்களை அமைதியாக இருக்குமாறு கூறிய ஆளுநர், உரையாற்றாமல் ஆளும் கட்சி பக்கமும் எதிர்க்கட்சி பக்கமும் ஒரு பார்வை பார்த்து விட்டு பேரவைத் தலைவரிடம் ஏதோ கூறினார். பின் னர் அடுத்த நொடியே அவையில் இருந்து வெளியேறினார்.  இதன்மூலம் 2-ஆவது ஆண் டாக தமிழக அரசின் உரையை வாசிக் காமல் ஆளுநர் ரவி, தமிழக மக்களை அவமதித்தார். இதையடுத்து, வழக்கம்போல ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு. அப்பாவு வாசித்தார். பின்னர், தேசிய கீதத்துடன் பேரவையின் முதல் நாள் கூட்டம் முடிவுற்றது.

தமிழக கட்சிகள் கண்டனம்

ஆளும் அரசு எழுதி கொடுத்த உரையை வாசிக்க மனமின்றி தேசிய கீதத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக,  மதிமுக, தி.க, மமக, முஸ்லிம்  லீக், பாமக உள்பட பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  அதிமுகவினர் ரகளை ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த நிலையில்,  அதிமுக சட்டமன்ற உறுப்பினர் களோ, அண்ணா பல்கலைக் கழ கத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட பிரச்சனையை முன்வைத்து கூச்சலிட்டனர். இதனால் அவை யை நடத்த முடியாத நிலை இருந்த தால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையில் இருந்து வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலை வர் அப்பாவு உத்தரவிட்டார்.  குதர்க்கமான விளக்கம் தமக்கான கண்டனம் அதிகரித்த நிலையில்,  பேரவைக்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்ட நிலையில், அர சியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக் கும் செயல்களுக்கு உடந்தை யாக இருந்து விடக்கூடாது என்ப தால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளி யேறினார் என்று ஆளுநர் மாளிகை குதர்க்கமான விளக்கம் ஒன்றை அளித்தது.