மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தமக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பெ. சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ. வேலு அவர்களுக்கும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் மாநில செயலாளர் தோழர் பழ. ஆசைத்தம்பி அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பெ. சண்முகம் கூறியுள்ளார்.