states

img

அசாம் நிலக்கரிச் சுரங்க விபத்து : 3 உடல்கள் மீட்பு

அசாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவட்டத்தின் உம்ரங்சோ பகு தியில் நிலக்கரிச் சுரங்கம்உள்ளது.  இந்த  நிலக்கரிச் சுரங்கத்தில் திங்க ளன்று ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக தண்ணீர் வேறு புகுந்ததால் சுரங்கத்திற்குள் 9 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, நிலக்கரி சுரங்கத்திற்குள் மீட்புப் பணியை தொடங்கினர். இந்நிலையில், செவ்வாயன்று காலை சுரங்கத்தில் இருந்து 3 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அசாம் அரசு கூறியுள்ளது. 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகியுள்ளதால், 6 பேரின் குடும் பத்தினர் கண்ணீருடன் சுரங்கத்திற்கு வெளியே நின்று கதறி அழுது காத்துக் கிடக்கின்றனர்.