states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சர்வதேச அளவில் மிகப்பெரிய பாராட்டுகளையும் உயரிய விருதுகளையும் வென்ற எண்ணற்ற தலைசிறந்த இந்திய பத்திரிகையாளர்களில் முகேஷ் சந்திராகரும் ஒருவர். உயிருடன் இருக்கும்போது உரிய மரியாதை அளிக்காமல் கொல்லப்பட்ட பின் இதயப்பூர்வமான அஞ்சலிகளை செலுத்தி என்ன பயன்?

மோடியின் ஆட்சியில் இந்தியாவில்  முதலீட்டு சூழல் மந்தமாகவே உள்ளது. தனியார் துறையினர் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். மொத்த அந்நிய நேரடி முதலீடுகளும் தேக்கமடைந்துள்ளது. இது மோடி அரசின் மீது கார்ப்பரேட்களின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகும்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 3 மாதங்களில் இரண்டாவது முறையாக என்னை முதல்வர் இல்லத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டது. வீடுகளை அபகரிப்பதன் மூலமும், அசிங்கப்படுத்துவதன் மூலமும், என் குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசுவதன் மூலமும் எங்களது வேலையை பாஜக நிறுத்தலாம். ஆனால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.

பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம்.  5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதிமொழி அளிப்போம். பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைவதை தடுக்க முடியாது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக “கோடி மீடியா” ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால்  சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே இந்த விவகாரம் தொடர்பாக மவுனம் காப்பதால் இது போலியானது என மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியான 86 வயதாகும் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, மருத்துவ காரணங்களுக்காக வரும் மார்ச் 31ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. 

அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி யிருப்பவர்களை மீட்க ராணுவம் களமிறக்கப் பட்டுள்ளது.

“இன்டர்போல்” போலீஸ் போல் இந்தியாவில் “பாரத் போல்” அமைப்பை ஒன்றிய அமைச் சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். சிபிஐ அமைப் பின் கீழ் செயல்படும் இந்த “பாரத் போல்” அமைப்பு சர்வதேச வழக்குகளில் விசாரணை அமைப்பு களுக்கு உதவும் என அமித் ஷா கூறியுள்ளார்.

அனுமதி இன்றி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ஜன் சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் திங்கள்கிழமை கைது செய்யப் பட்ட நிலையில், அவரது உடல்நிலை பாதிப்பு அடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரதம் இருந்தார்.