2022ஆம் ஆண்டு நடை பெற்ற பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றி யது. முதல்வராக பகவந்த் மான் உள் ளார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி அளிப்பதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் பெண் களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் ரூ.1,000 வாக்குறுதி நிறைவேற்றாததை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினர். “3 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கெஜ்ரிவால் ஏன் நிறைவேற்றவில்லை? எப்போது நிறைவேற்றுவார்?” என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.