states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எச்எம்பிவி தொற்று விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஆனால் இந்த தொற்று கடந்த 2001ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. இது கேரளா உட்பட உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த தொற்று இதற்கு முன்பும் கேரளாவில் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் கேரள ஆய்வகங்களில் உள்ளது. இந்த தொற்று குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை.

தில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக அறிவித்திருக்கும் 29 வேட்பாளர்களில், பெண்களுக்கு 10% தான் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் பெண்கள் விரோத கொள்கைக்கு இது மற்றுமொரு உதாரணம் ஆகும்.

வினாத்தாள் கசிவுக்கு ஆதரவாக தனியாக ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு திரைக்கதை, இயக்குனர், தயாரிப்பாளர், பைனான்சியர், நடிகர் யாரென்று எனக்கு நன்றாக தெரியும். பாஜகவின் பி-டீம் மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியும்.

சத்தீஸ்கர் பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் படுகொலை மிகவும் வருத்தமளிக்கிறது. இது பத்திரிகையாளரின் கொலை அல்ல, ஜனநாயகத்தின் படுகொலை. இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட சாதனத்தில் 4 நாட்களில் பயறு வகையை சேர்ந்த விதை முளைத்துள்ளது. வரும் நாட்களில் விதை நன்கு வளர்ந்து இலை உருவாகும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மனிதர்களை பாதிக்கும் எச்எம்பிவி வைரஸ், கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு வெளியிட்ட சில நிமிடங்களில், இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100 சதவீதத்தை எட்டி இருப்பதாக கூறினார்.

ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான 15ஆவது “ஏரோ இந்தியா 2025” கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள “கேட் ஆப் இந்தியா” பெயரை “பாரத மாதா கேட்” என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு கடிதம் எழுதியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பிச்சைக் கேட்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தில்லியில் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

இந்தியா கூட்டணி ஆளும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பொது மக்களின் ஆலோசனைகள்/கருத்துக்கள்/ யோசனைகளைப் பெற “அபுவா பட்ஜெட் போர்டல்” மற்றும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.