states

img

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கொடூரம் சாலை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் சடலமாக மீட்பு

ராய்ப்பூர் பாஜக ஆளும் சத்தீஸ் கர் மாநிலத்தின் பீஜப் பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சந்திரகர்.  பத்திரிகையாளரான இவரை ஜனவரி 1ஆம் தேதி முதல் காணவில்லை. நீண்ட நேரமாகி யும் முகேஷ் வீடு திரும்பாத தால், அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  சிசிடிவி காட்சிகளின் அடிப் படையில் முகேஷ், கடைசியாக ஒப்பந்ததாரர் சுரேஷின் குடி யிருப்புப் பகுதிக்குச்  சென்ற பின் வீடு திரும்பாதது தெரிய வந்தது. சுரேஷின் குடியிருப்புப் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ஒரு தண்ணீர்த் தொட்டியில் முகேஷ் சடலமாக கிடந்தார்.  சுரேஷின் சகோதரர் ரித்தே ஷிடம் நடைபெற்ற விசாரணை க்குப் பிறகு தான் பல்வேறு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதாவது செய்தி யாளர்கள் சந்திப்பின் பொ ழுது ஒப்பந்த முறைகேடு தொ டர்பாக தங்களை கேள்வி கேட் டதற்காக பத்திரிகையாளர் முகேஷ் கொல்லப்பட்டதாக ரித்தேஷ் வாக்குமூலம் அளித்தார்.  என்ன நடந்தது? டிசம்பர் கடைசி வாரத்தில் பத்திரிகையாளர் முகேஷ் ரூ.120 கோடி மதிப்பிலான பஸ் தார் சாலை கட்டுமானத் திட்டத் தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக ஒப்பந்ததாரரான சுரேஷுடனான பேட்டியில் கேள்வி எழுப்பினார். அதன் பிறகு புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) சுரேஷின் சகோதரர் ரித்தேஷ் ஒப்பந்த செய்தி விவ காரம் தொடர்பாக தனது குடியிருப்புப் பகுதிக்கு வரு மாறு அழைத்துள்ளார். இதைய டுத்து குடியிருப்புப் பகுதிக்கு வந்த சுரேஷ் படுகொலை செய் யப்பட்டு தண்ணீர்த் தொட்டி யில் தூக்கி எறியப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த படுகொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  சுரேஷின் சகோதரர் ரித்தேஷ் மட்டும் கைது செய்யப் பட்டுள்ளார். முக்கிய குற்ற வாளி சுரேஷ் இன்னும் கைது செய்யப்படவில்லை. சுரேஷூம் அவரது குடும்பத்தினரும் தலை மறைவாக இருப்பதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர். ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையா ளர் படுகொலை செய்யப்பட்ட  சம்பவம் நாடு முழுவதும் அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.