மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பெ.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி ஆகிய அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.