சென்னை,ஜனவரி.02- நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாகக் கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்.வி சேகர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஒரு மாத கால சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.