court

img

கொடி கம்பங்களை அகற்ற தடை - சிபிஎம் முறையீட்டுக்கு கிடைத்த வெற்றி!

மறு உத்தரவு வரும் வரை கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மேல்முறையீடு செய்திருந்தார்.
மேலும் இந்த பிரச்சனை குறித்து மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்க ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்த நிலையில்.
இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மறு உத்தரவு வரும் வரை கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது எனவும் கொடிக் கம்பங்களின் தற்போதைய நிலையே தொடரும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.