மாநில சுயாட்சியை வென்றெடுப்பதே தீர்வு!
ஒன்றிய அரசின் நிதி மறுப்பு, மொழித் திணிப்பு அராஜகம்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
ஒன்றிய பாஜக அரசின் மொழித் திணிப்பு, நிதி மறுப்பு அநீதிகளுக்கு முற் றுப்புள்ளி வைக்கவும், இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை பாதுகாக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெ டுப்பதே தீர்வு என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். “சரியான முன்னெடுப்பு மூலம், மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரி மைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியைக் காக்க முடியும்; இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், செவ் வாயன்று காலை கேள்வி நேரம் முடி வடைந்த உடன் மும்மொழி கொள்கை குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. நிறைவாக விவாதங்களுக்குப் பதிலளித்து முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, “இருமொழிக் கொள்கை குறித்து பேசும்போது பாஜக தவிர்த்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் அனைவரும் தங்களது உணர்வை வெளிப்படுத்தினர். அதனடிப்படையில், எந்தக் காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாது” என்று கூறிய முதலமைச்சர், “மும்மொழிக் கொள்கை குறித்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர்.
இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். மும்மொழிக் கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். நிதி தரவில்லை என இன மானத்தை அடமானம் வைத்து, வெகு மானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. இது பணப்பிரச்சனை அல்ல, இனப் பிரச்சனை. இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினா லும். பணமே வேண்டாம் என தாய்மொழி யை காப்போம்” என்றார். “யார் எந்த மொழியை கற்பதிலும் தடையாக இருப்பதில்லை. அதேநேரம் தமிழை அழிக்கும் ஆதிக்க மொழி எது வாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. 3-ஆவது மொழியை அனு மதித்தால், அது நம்மை மென்று தின்று விடும் என்று வரலாறு உணர்த்துகிறது. இந்தி மொழித் திணிப்பு மூலமாக, மாநில மொழிகளை அழிக்க, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களைத் தங்களது கொத்தடிமை பகுதிகளாக நினைக்கின்றது ஒன்றிய அரசு. இப்படி கொத்தடிமை பகுதிகளாக நினைப்பதால் மொழித் திணிப்புகள், நிதி அநீதிகள் செய்கின்றனர்” என முதலமைச்சர் ஸ்டா லின் குற்றம் சாட்டினார். ‘எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை பாதுகாக்கவும் மாநி லங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்திலே நாம் (தமிழ்நாடு) இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியைக் காக்க முடியும்; தமிழினத்தை உயர்த்த முடியும் என்பதை தெரிவித்து அதற்காக அறிவிப்பை விரை வில் வெளியிடுவேன் என்று அறி விக்கிறேன்” என்று முதலமைச்சர் தமது உரையை நிறைவு செய்தார்.