இளம்பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
இளம்பெண் உயிரிழப்பில் சந்தே கம் இருப்பதாகக்கூறி, அவரது உறவி னர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சாலை மறியலில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவருக் கும், காக்காபாளையம் அருகே உள்ள சுந்தரி என்பவருக்கும், கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடைபெற் றது. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும், நான்கு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நி லையில், சுந்தரி கடந்த 18ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட ராஜன் மற் றும் அவரது உறவினர்கள் சுந்தரியை மீட்டு, இளம்பிள்ளையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் சுந்தரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சுந் தரியின் உறவினர்கள், அவரது உயிரி ழப்பில் சந்தேகம் உள்ளதாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுந்தரி இறந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் காவல் துறை யினர் உரிய நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி, சுந்தரியின் உறவி னர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதையடுத்து காவல் துறையி னர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
ஊத்துக்குளி வாரச்சந்தை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சிபிஎம் கோரிக்கை
ஊத்துக்குளி வாரச்சந்தையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத் துக்குளி தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி. ஊத்துக்குளி தாலுகா குழு வருவாய் கோட் டாட்சியரிடம் அளித்த மனுவில், “ஊத்துக் குளி பேரூராட்சி பகுதியில் வாரந்தோறும் புதன் கிழமை கூடும் வாரச்சந்தைக்கு சுற்றுவட்டா ரத்தில் இருந்து ஏராளமான மக்கள் வருகின்ற னர். இதனால், சந்தை நடைபெறும் நாளில் மதி யம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஈரோடு மற்றும் திருப்பூர் செல்லும் பேருந்து கள் அனைத்தும் இந்த வழியாக செல்வதால் நெருக்கடி அதிகரிக்கிறது. சந்தைக்கு வரும் மக்கள் இருசக்கர வாகனங்களை சாலைக ளில் நிறுத்துவதால் பிரச்சனை மேலும் அதிக ரிக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் செல்லும் மாலை நேரங்களில் நிலைமை மோசமாகிறது. சாலை ஆக்கிரமிப்புகளே இந்த போக்கு வரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம். எனவே, ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதி கள் இணைந்து கூட்டுக் கூட்டம் நடத்தி இதற்கு தீர்வு காண வேண்டும். நெடுஞ்சாலை துறையும், ஊத்துக்குளி பேரூராட்சியும் இணைந்து சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் மற்றும் விளம் பர பலகைகளை அகற்ற வேண்டும். மேலும், நெரிசல் குறையாவிட்டால், வாரச்சந்தை நடைபெறும் புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை தெற்கு ரத வீதி மற்றும் மேற்கு ரத வீதி வழியாக போக்கு வரத்தை மாற்றியமைக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மலைக்கிராம மக்களின் இருண்ட வாழ்க்கை!
நிலவில் கால் பதித்து, சந்திரா யனில் ஆய்வுகள் மேற்கொள்ளும் அளவிற்கு அறிவியல் முன்னேற் றம் அசுர வேகத்தில் பயணித்த போதிலும், ஆட்சியாளர்களின் அசைவற்ற போக்கினால், அடிப் படை வசதிகள் கூட இல்லாமல் தமி ழகத்தின் பல்வேறு மலை கிராம பழங்குடியின மக்கள் அவதியுறு வது கடந்து போகும் ஒன்றாகவே மாறிப்போயுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் அருகே அமைந்துள்ள கடம்பூர் மலைகளில் உள்ள மல்லி யம்மன் துர்கம் கிராம மக்கள், இன் றளவும் அடிப்படை வசதிகள் இன்றி இருளிலேயே வாழ்ந்து வருகின்ற னர். சத்தியமங்கலத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்திற் குச் செல்ல முறையான சாலை வசதிகூட இல்லை. 9 கிலோமீட்டர் தூரம் மண் சாலையில் பயணித்து, பின்னர் 5 கிலோமீட்டர் தூரம் ஒற் றையடிப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிரா மம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் நீலகிரி மக்கள வைத் தொகுதியின் கீழ் வருகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் ஜனநாயகக் கடமையை ஆற்றும் இந்த மக்களுக்கு, அடிப்படை வச திகளில் ஒன்றான மின்சாரம் கூட கிடைக்கவில்லை என்பது வேத னையான விஷயம். 1972 ஆம் ஆண்டு இங்கு மின்சா ரம் வழங்கப்பட்டாலும், தனிப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங் கப்படவில்லை. மரக்கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தெரு விளக் குகளும், சில ஆண்டுகளில் காட் டுத் தீயில் எரிந்து சாம்பலாகிப் போயின. பின்னர், சில ஆண்டுக ளுக்கு முன்பு சூரிய ஒளி விளக்கு கள் அமைக்கப்பட்டாலும், பேட்டரி கள் பழுதடைந்ததால் அவை பய னற்றுப் போயின. கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் விளக்கு மட்டுமே சூரிய சக்தியில் இயங்குகிறது. அரசாங்கம் வழங்கிய தொலைக் காட்சி, கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி போன்ற பொருட்கள் வீடுகளில் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. பெரும்பாலான வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகளே இரவில் வெளிச்சம் தருகின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நோயாளிகளை தொட்டில் கட்டி கடம்பூருக்கு தூக்கிச் செல் லும் அவல நிலை இருந்தது. பின் னர், கிராம மக்களே ஒன்றிணைந்து பாதையை அமைத்தனர். தற்போது சில இளைஞர்கள் மட்டுமே இரு சக்கர வாகனத்தில் செல்லக்கூடிய ஆபத்தான பாதையாக அது உள் ளது. 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்பும் மாணவர்கள் சத் தியமங்கலத்தில் தங்கி படிக்க வேண்டிய சூழல் உள்ளது. மலை யாளி இனத்தைச் சேர்ந்த இந்த மக்கள், அரசு முற்பட்ட வகுப்பினர் என்று கூறுவதால், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். மல்லியம்மன் துர்கம் கிராமம் மட்டுமின்றி, அந்தியூர் வட்டத்தில் உள்ள பர்கூர் மலை கத்திரிமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ராமர் அணை போன்ற பழங்குடியினர் கிராமங் களிலும் மின்சார வசதி இல்லை. வன உரிமைச் சட்டம் 2006 இல் கொண்டுவரப்பட்டாலும், மலை வாழ் மக்களின் வாழ்க்கை யில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சட் டம் கொண்டுவர ஒரு போராட்டம், அதை செயல்படுத்த ஒரு போராட் டம் என மலைவாழ் மக்களின் வாழ்வே போராட்டமாக மாறிவிட் டது. -ஈரோடு க.ராஜ்குமார்