tamilnadu

ஊத்துக்குளி வாரச்சந்தை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சிபிஎம் கோரிக்கை

ஊத்துக்குளி வாரச்சந்தை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 25– ஊத்துக்குளி வாரச்சந்தையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத் துக்குளி தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி. ஊத்துக்குளி தாலுகா குழு வருவாய் கோட் டாட்சியரிடம் அளித்த மனுவில், “ஊத்துக் குளி பேரூராட்சி பகுதியில் வாரந்தோறும் புதன் கிழமை கூடும் வாரச்சந்தைக்கு சுற்றுவட்டா ரத்தில் இருந்து ஏராளமான மக்கள் வருகின்ற னர். இதனால், சந்தை நடைபெறும் நாளில் மதி யம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஈரோடு மற்றும் திருப்பூர் செல்லும் பேருந்து கள் அனைத்தும் இந்த வழியாக செல்வதால் நெருக்கடி அதிகரிக்கிறது. சந்தைக்கு வரும்  மக்கள் இருசக்கர வாகனங்களை சாலைக ளில் நிறுத்துவதால் பிரச்சனை மேலும் அதிக ரிக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் செல்லும் மாலை நேரங்களில் நிலைமை மோசமாகிறது. சாலை ஆக்கிரமிப்புகளே இந்த போக்கு வரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம். எனவே, ஊத்துக்குளி பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதி கள் இணைந்து கூட்டுக் கூட்டம் நடத்தி இதற்கு தீர்வு காண வேண்டும். நெடுஞ்சாலை துறையும், ஊத்துக்குளி பேரூராட்சியும் இணைந்து சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானங்கள் மற்றும் விளம் பர பலகைகளை அகற்ற வேண்டும். மேலும், நெரிசல் குறையாவிட்டால், வாரச்சந்தை நடைபெறும் புதன்கிழமைகளில் மாலை 4  மணி முதல் இரவு 9 மணி வரை தெற்கு ரத வீதி மற்றும் மேற்கு ரத வீதி வழியாக போக்கு வரத்தை மாற்றியமைக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.