tamilnadu

img

பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா

பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலா ளர்களை பணிநிரந்தரம் செய்ய வலி யுறுத்தி சிஐடியு மின்வாரிய ஒப் பந்த ஊழியர்கள் செவ்வாயன்று மாநிலம் தழுவிய தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். திமுக தேர்தல் வாக்குறுதி 153-இன்படி, மின்வாரியத்தில் பல  ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந் தத் தொழிலாளர்களை அடையா ளம் கண்டு பணிநிரந்தரம் செய்திட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு வாரியமே தினக்கூலியாக ரூ.380 வழங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு மின்வா ரிய ஒப்பந்த ஊழியர்கள் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக கோவை  டாடாபாத், மத்திய அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன் தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக்க வுரையாற்றினார். மண்டலச் செய லாளர் டி.கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். நெகமம்  கோட்டத் தலைவர் கே.சுந்தரவடி வேலு நன்றி கூறினார். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற தர்ணா விற்கு, மின்வாரிய ஒப்பந்தத் தொழி லாளர்கள் சங்க மாவட்ட திட்டத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட் டச் செயலாளர் வேலுசாமி, மின்   வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.