தீ வைத்து எரிக்கப்பட்ட மனித மண்டை ஓடுகள்: போலீசார் விசாரணை
நாமக்கல், மார்ச் 25- ராசிபுரம் அருகே இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்தி ரம் ஒன்றியம், கோவிந்தம்பாளையம் பகுதியில் மூதாட்டி ஒரு வர் செவ்வாயன்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை புதைப்பதற்காக கோவிந்தம்பாளையம் பகுதியில் உள்ள இடுகாட்டில் அவரது உறவினர்கள் குழி வெட்டியுள்ள னர். அப்போது, அங்கு சுமார் 6 மனித மண்டை ஓடுகள், மாந் திரீகத்திற்கு பயன்படும் ஆணி, அரிவாள், போலீசார் பயன்ப டுத்தக்கூடிய காலணிகள் இருந்ததைக் கண்டுத்து அதிர்ச்சிய டைந்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாத்தயங்கர்பட்டி உதவி கிராம நிர்வாக அலு வலர் கலைச்செல்வி விசாரணை நடத்தினர். இடுகாட்டில் மனித மண்டை ஓடுகள் பாதி எரிந்தும், எரியாமலும் இருப்ப தால் இந்த மண்டை ஒடுகள் மாந்திரீகம் செய்வதற்காக எடுத்து வரப்பட்டதா? அல்லது யாரேனும் கொலை செய்யப்பட்டு மண்டை ஓடுகள் எரிக்கப்பட்டதா? என்பது குறித்து புதுச்சத்தி ரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூய்மைப்பணியில் மெத்தனம் ஒப்பந்ததாரருக்கு அபராதம்
அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அப ராதம் விதித்து தருமபுரி ஆட்சியர் உத்தரவிட்டார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து கையிருப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சி யர் திரு. ரெ.சதீஸ் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார். தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத் துவம், பெண்கள் நலப்பிரிவு, மயக்கவியல் பிரிவு, குழந்தை கள் நலப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து, நோயா ளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவ அலு வலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சிகிச்சை பெற வருபவர் களின் உதவியாளர்கள் காத்திருக்கும் இடத்தினை ஆய்வு செய்து, அவர்கள் அமர்வதற்கான உரிய ஏற்பாடுகளை மருத்துவமனையில் ஏற்படுத்தி தர வேண்டும். சிகிச்சை பெற வருவோரின் நலனுக்காக மருத்துவமனை வளாகத்தின் வெளிப்புறம் மேற்கூரை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அறிவுறுத்தினார். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படா மல் இருந்ததால், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் தனி யார் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த ஆய்வின் போது, அரசு தருமபுரி மருத்துவக் கல் லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) சிவக்குமார், உள்ளி ருப்பு மருத்துவர் நாகேந்திரன், பானுரேகா, குழந்தை பிரிவு மருத்துவர்கள் ரமேஷ்பாபு, பாலாஜி, மருத்துவர்கள், செவி லியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஆகி யோர் உடனிருந்தனர்.
சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய கருத்து : அதியமான் கண்டனம்
கோவை, மார்ச் 25– தூய்மைப் பணியாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து களை பேசிய யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கடும் கண்டனத்தை தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக கோவையில் செவ்வாயன்று செய்தியா ளர்களை சந்தித்த அதியமான் பேசியதாவது, “தூய்மைப் பணியாளர்களை குடிகாரர்களைப் போல சித்தரித்து பேசிய சவுக்கு சங்கரை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக் கிறது. சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்த ராணுவ படையினர் மறுத்த போது, இங்குள்ள தூய்மைப் பணியாளர்களே அந்தப் பணியை மேற்கொண்டனர். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குடிகாரர்களாக சித்தரித்து பேசியதன் விளைவாக சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இது அவரது செய லுக்கு எதிர்வினையாக (Action-Reaction) ஏற்பட்டுள்ளது. முன்னதாக சீமான் போன்றவர்களும் அருந்ததியரை ‘வந் தேறிகள்’ எனவும், தூய்மைப் பணிக்காகவே அழைத்து வரப் பட்டவர்கள் எனவும் பேசி எதிர்வினையை சந்தித்துள்ளனர். இப்போதும் சவுக்கு சங்கர் அதேபோன்ற செயலில் ஈடு பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படலாம். இது குறித்த முடிவு விரைவில் தெரியவரும். யூடியூபராக இருப்ப தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணம் ஏற்பு டையது அல்ல. இனிவரும் காலங்களில் இதேபோல் பேசி னால், ஆதித்தமிழர் பேரவை சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டங்களை அறிவிக்கும்”, என்றார்.