tamilnadu

img

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார்

பட்டியலின மாணவரின் சாதி பெயரை சொல்லி திட்டி, தாக்குதல் நடத்திய சாதி  ஆதிக்கவாதிகள் மற்றும் அதற்கு துணை நிற் கும் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தருமபுரி மாவட்ட முதன்மை  கல்வி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தி னர், அவரது உறவினர்கள் அளித்த மனு வில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட் டம், ஏர்பையனஅள்ளி கிராமத்தில் பட்டிய லின சமூகத்தைச் சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் 12 கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்நிலையில், மார்ச் 21 ஆம் தேதி யன்று, பள்ளியின் அருகாமையில் உள்ள சாதி ஆதிக்கவாதியான செல்லப்பன் (எ) முத் தூரன் என்பவர், பள்ளி வளாகத்திற்குள் சென்று பட்டியலினத்தைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு பயிலும் 2 மாணவர்களை, சாதி பெயரை சொல்லி திட்டி, தாக்குதல் நடத்தி யுள்ளார். அதனை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகராறு செய்த நபரை கண்டிக் காமல், மாணவனை சமாதானப்படுத்தி, பெற் றோர்களிடமோ, உறவினர்களிடமோ கூற  வேண்டாம் எனக்கூறி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரி யர்களிடம் விசாரித்தபோது, சரியான பதில் கூறவில்லை. அப்போது, பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவர் ஆறுமுகம், பள்ளியின் கேட்டை மூடிவிட்டு, எங்களை வெளியில் செல்லுமாறு தகாத வார்த்தைகளால் திட்டி னார். எனவே, பள்ளி நிர்வாகத்தின் மீதும் பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவர் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திராவிடம் கேட்ட போது, தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடை பெற்று வருகிறது. தேர்வு முடிந்த பின்பு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப் படும், என தெரிவித்தார்.