தஞ்சாவூர், பிப். 11- தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல், இந்து - முஸ்லிம் மத மக்களி டையே மோதலை தூண்டும் வகையில் பல்வேறு இழிவான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் மதுரை அருகே திருப்பரங்குன்ற மலையில் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசல் மூலம் இந்து - முஸ்லிம் மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பாஜக - ஆர்எஸ்எஸ் - இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை திருப்பரங் குன்ற மக்கள் கண்டுகொள்ளவில்லை. அதே போல பாஜகவின் அரசியலை அறிந்த திருப்பரங்குன்றம் மக்கள் மற்றும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கூட்டாக இணைந்து மத வன்முறையை தூண்டும் முயற்சியை முறியடித்தனர். திருப்பரங்குன்றம் போல தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பாஜக வினர் மதவன்முறையை தூண்ட முயற்சித்து வருகின்றனர். தஞ்சாவூர் மக்கள் பதிலடி இத்தகைய சூழலில் தஞ்சாவூர் அருகே இந்து கோவிலின் கும்பாபி ஷேகத்திற்கு முஸ்லிம் மக்கள் சீர் செய்துள்ள மதநல்லிணக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூரின் புறநகர் பகுதியான புன்னைநல்லூரில் உள்ளது மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு இந்து சமய நலத்துறையின் தீவிர முயற்சியால் திங்கள்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சா வூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயி ரக்கணக்கானோர் இந்த கும்பாபி ஷேகத்தில் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான ஞாயிறன்று புன்னைநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள், தங்களது பாரம்பரிய உடைகளுடன் கும்பாபிஷேகத்திற்கு தேவையான உடைகள், உலர் பழங்கள் மற்றும் பிற பிரசாதம் சார்ந்த பொருட்கள் என 51 தட்டுகளில் எடுத்துச் சென்று பூஜை நடக்கும் யாக சாலையில் சமர்ப்பித்தனர். மேலும் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜை கள் செய்யப்பட்ட இடங்களில் முஸ்லிம் மக்கள் அமர்ந்து வழிபாடு நடத்தினர். தமிழ்நாட்டில் இந்து - முஸ்லிம் மக்களிடையே மத மோதலை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வரும் நிலையில், தங்களது மதநல்லிணக்க செயல்பாடு மூலம் பாஜகவினருக்கு தஞ்சாவூர் மக்கள் பதிலடி கொடுத் துள்ளனர்.