“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”
என்ற திருக்குறள் மறந்து போய்விட்டது போலும் ஒன்றிய நிதி அமைச்சருக்கு. ஒன்றிய மோடி அரசு பதவியேற்று 11 ஆண்டுகளில் கல்விக்கு ஒதுக்கிய நிதி கணக்கு காட்டுவதற்காக ஒதுக்கிய நிதி ஆகவே உள்ளதே தவிர, கல்வி வளர்ச்சிக்கு என்று ஒதுக்கிய தாக தெரியவில்லை.
வெற்று முழக்கங்கள்
நீண்ட காலமாக பட்ஜெட் ஒதுக்கீட்டில் 6 சதவீதம் அளவீட்டில் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று 1960 கோத்தாரி கமிஷன் முதல் பல்வேறு கல்வியா ளர்களும், மாணவர் இயக்கங்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 2019- தேர்தல் அறிக்கை யிலும், தேசிய கல்விக் கொள்ளை 2020-இலும் கல்விக்காக பட்ஜெட்டில் 6 சதவீதம் வழங்குவோம் என வெற்று வாக்குறுதிகள் மட்டுமே உள்ளன. ஆனால் செயல்பாடுகளில் ஒன்றும் பிரதிபலிக்கவில்லை. 2025- 2026 பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.5 சதவீதம் மற்றும் மொத்த பட்ஜெட்டில் 2 சத வீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 100 சதவீதம் தரமான பள்ளிக் கல்வி, அனைவருக்கு மான வளர்ச்சி என்ற வாக்குறுதிகளை நிறைவேற்று வதில் தோல்வி அடைந்துள்ளது ஒன்றிய அரசு.
பிஎம் போசான் திட்டம் குழந்தைக்கு 5காசு
மதிய உணவு திட்டத்தை உள்ளடக்கிய பிஎம் போசான் திட்டத்துக்கு வெறும் 0.2 சதவீதம் மட்டுமே கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.12 ஆயிரத்து 467.39 கோடியிலிருந்து ரூ.12 ஆயிரம் 500 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு குழந்தைக்கு சரா சரியாக 5 காசு மட்டுமே கூடுதலாக அமைகிறது. பட்ஜெட் இப்படி இருக்க, போசான் ட்ரேக்கர் தரவின் படி நாட்டில் 17 விழுக்காடு குழந்தைகள்(2.7 கோடி) குறைந்த எடையுடன், 37 விழுக்காடு குழந்தைகள் குறைந்த உயரத்துடன், 6 விழுக்காடு குழந்தைகள் தீவிர உடல் மெலிவுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கன்வாடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் குறைக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் நிலவும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு மேலும் அதிகரிக்கும். உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா என மோடி பேசி வரும் நிலையில், இந்த பட்ஜெட் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கையைத் தான் அதிகரிக்கும்.
பள்ளிக் கல்வி
பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.73 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.78 ஆயிரத்து 572 கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு களில் அரசு ஒதுக்கிய நிதியை, சரியாக பயன்படுத்த வில்லை என்பதால் இந்த அதிகரிப்பை சந்தேகத்து டனே பார்க்க முடியும்.
உயர்கல்வி
உயர்கல்விக்கான நிதி ரூ.47 ஆயிரத்து 619.77 கோடியில் இருந்து ரூ.50 ஆயிரத்து 77.95 கோடி யாக அதிகரிக்கப்பட்டதாகக் கூறினாலும், தற்போ தைய பணவீக்கம் 5.22 விழுக்காடை கணக்கில் எடுத்தால் உண்மையில் உயர் கல்விக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட்டில் உயர் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1 விழுக்காட் டிற்கும் குறைவாக உள்ளது. இந்திய அறிவுத் தொகுதி திட்டத்திற்கு ரூ.10 கோடியில் இருந்து ரூ.50 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் இத்திட்டம் அறி வியல் தரத்தை வளர்க்காமல், மதவாதத் தன்மையு டன் சான்றில்லா கருத்துகளை புகுத்துவதாக இருந்தது. கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கட்டமைப்பு களை உருவாக்க கொண்டுவரப்பட்ட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்கள் திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி ஆயிரத்து 800 கோடி ரூபாயில் இருந்து 475.12 கோடி ரூபாயாக 73 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. ஐஐடி கட்டுமான வசதிகளை மேம்படுத்து வதற்கான மூலதனச் செலவீடுகள் குறைக்கப் பட்டுள்ளது (ரூ.11 கோடியில் இருந்து 10.27 கோடியாக) ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழ கங்களின் உட்கட்டமைப்பு தற்காலமயப்படாமல் இருக்கும் நிலையில், நிதி குறைக்கப்பட்டுள்ளது. இது அறிவியல் வளர்ச்சியில் அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது.
மத்தியப் பல்கலை.களில் தனியார் ஆதிக்கத்துக்கு வழி
யுஜிசிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி 2023-2024 பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது 47 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை யில், மொத்த மாணவர் சேர்க்கை வீதம் இந்தியா முழு மைக்கும் 25 சதவீதம் உயர்த்துவதை நோக்கம் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நேர் எதிராக உள்ளது இந்த பட்ஜெட். மத்திய பல் கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 3 விழுக்காடு, உயர்கல்வி நிதி முகவர் (HEFA) கடன்களின் மூலம் திருப்பி செலுத்துவது என்பது உயர் கல்வியை தீவிரமாக தனியார்மயம் ஆக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறது. இந்த கடன்களின் அளவு ரூ.372 கோடியில் இருந்து ரூ.462 கோடியாக உயர்ந்துள் ளது. இது அரசு பல்கலைக்கழகங்களில் தனியார் முத லீட்டாளர்கள் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
ஆசிரியர் நியமனம்,
கல்வி உதவித் தொகை
2025- 2026 ஆண்டிற்கான பட்ஜெட்டில் இந்தியா முழுவதும் ஆசிரியர்களை நியமிப்பதற்கான தனித்துவ மான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இல்லை. ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், ஆசிரியர் பயிற்சிக்கான உட்கட்ட மைப்புகளை உருவாக்குவதற்கும், ஆசிரியர் பயிற்சியை தற்காலப்படுத்துவதற்காக முகாந்திரம் இல்லாத மற்றும் இந்திய முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்கும் நவீன ஆய்வ கங்கள் உருவாக்கத்திற்கும் உத்தரவாதம் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. ஏற்கெனவே நிறுத்தப்பட்ட பல்வேறு கல்வி உதவித் தொகைகளை மீண்டும் செயல்படுத்துவ தற்கான உத்தரவாதம் இல்லை. தற்போது வழங்கி வரும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி உதவித் தொகைகளை பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்துவதற்கான எந்த அறி விப்பும் இல்லை. மேலும், சமூக மேம்பாடு குறித்தான கண்ணோட்டம் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கை -2020 வழியாக கல்வியை தனியார் முதலாளிகளுக்கு விற்று, பொதுக் கல்வியை சீர்குலைத்து கல்வியை பெரும்பான்மை யான ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் சுமை யாக மாற்றும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளது. கட்டுரையாளர்: இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர்