இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா?
இன்று கடைசி ஒருநாள் போட்டி
டி-20, ஒருநாள் என 2 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி மாதம் முதல் வாரம் தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து கனடா வீரர்கள் வெளியேறுகின்றனரா?
சமீபத்தில் அமெரிக்க ஜனாதி பதியாக டிரம்ப் பதவி யேற்றார். கூடுதல் வரிவிதிப்பு மற்றும் 51ஆவது மாகாணமாக இணைப்போம் என கனடா நாட்டிற்கு எதிராக தொட ர்ந்து பேசி வருகிறார். இதனால் கனடா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. டிரம்ப்பின் அடாவடி பேச்சிற்கு பதி லடியாக கனடா அரசு மதுபானம் உள்ளிட்ட அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் வேலையை துவங்கி யுள்ளன. இத்தகைய சூழலில் அமெரிக்காவில், அந்நாட்டு கிளப் அணிகளுக்காக (கூடைப்பந்து, கால்பந்து, ரக்பி, அமெரிக்கன் கால்பந்து, கிரிக்கெட்) விளையாடி வரும் கனடா வீரர் - வீராங்கனைகள் சொந்த நாட்டுக்கு அல்லது ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் கிளப் போட்டி களுக்கு இடம்பெயரும் திட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது அமெரிக்க விளையாட்டு பிரிவுக்கு மோசமான அளவில் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படு கிறது. காரணம் அமெரிக்காவில் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் போது மான அளவில் விளையாட்டு சார்ந்த கிளப் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ரசிகர்களுக்கு உலகளவில் குவியும் பாராட்டு
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸி லாந்து ஆகிய அணிகள் விளையாடி வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், எதிர்பாராவிதமாக நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவிந்திரா கேட்ச் பிடிக்கையில் படுகாய மடைந்தார் (நெற்றியில் பந்து தாக்கி). ரத்தம் சொட்டு சொட்டாக சிந்திய நிலையில் ரச்சின் ரவிந்திரா மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்ட லுடன் ரச்சின் ரவிந்திராவை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு உள்ளத்தை கண்ட நியூசிலாந்து வீரர்கள் மைதானத்திலேயே பாராட்டுக்களை தெரிவித்தனர். அதே போல இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு உலகளவில் பாராட்டுக் கள் குவிந்து வருகிறது.