அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் அவருடைய நிர்வாகத்தின் அட்டூ ழியம் அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளி யேற்றுகிறோம் என்ற பெயரில் இந்திய குடி மக்களை போர்க் கைதிகளைப்போல கைகளில் விலங்கிட்டு சங்கிலியால் பிணைத்து ராணுவ விமானத்தில் ஏற்றி குப்பையை அள்ளிக் கொட்டுவது போல இந்தியாவில் இறக்கி விட்டுப் போகிறது டிரம்ப் நிர்வாகம்.
தன்னுடைய நாட்டின் குடிமக்களை இவ்வாறு நடத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்தவொரு வகையிலும் ஆத்திரம் ஏற்பட வில்லை. அமெரிக்க அரசை கண்டித்து ஒரு வார்த்தை கூட அவர் இதுவரை பேசவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி கேட்ட போதும், மோடி அரசு வாய்திறக்கவில்லை.
ஆனால் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்று வது போல, அமெரிக்க ஜனாதிபதியும் எனது நண்பருமான டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளேன். அவருடைய முதல் பதவிக்காலத்தில் இந்தியா அமெரிக்கா இடையே உலகளாவிய ஒத்துழைப்பு ஏற்பட்டது போல இருதரப்பு உறவுகளை வலுப் படுத்த இருக்கிறோம் என்கிறார் மோடி. அத்து டன் இல்லாமல் இந்த உறவு இந்தியா, அமெ ரிக்காவுக்கு மட்டுமின்றி உலகுக்கே நன்மை பயக்கும் என்றும் டிரம்ப் நிர்வாகத்தின் அட்ட காசத்திற்கு ஆலோலம் பாடுகிறார்.
டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக் காலத்தின் போது இந்தியாவிற்கு ஏற்பட்ட லாபம் என்று ஏதாவது ஒன்றையாவது பிரதமர் மோடியால் எடுத்துக் கூற முடியுமா? இருவருமே கடைந் தெடுத்த வலதுசாரிகள் என்ற முறையில் கருத்தி யல் ரீதியாக கூடி குலாவினார்களேயன்றி இந்தியா கண்டபலன் ஏதுமில்லை.
மாறாக, மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அயல் துறை கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள் ளது. அமெரிக்க வல்லாதிக்கத்தின் இளைய பங்காளியாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. சர்வ தேச அரங்கில் அமெரிக்கா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு அடாவடி நடவடிக்கைகளுக்கு ஐ.நா. சபை உள்ளிட்ட அரங்குகளில் இந்தியா ஆதரவளிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
இந்திய பொருளாதார நலனை புறந்தள்ளி கடந்த ஏழாண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா 1500 கோடி டாலர் அளவுக்கு ஆயுதங்க ளை வாங்கியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலில் அநியாய யுத்தத்தில் அமெரிக்க நிர்ப் பந்தம் காரணமாகவும் சித்தாந்த இசைவு காரண மாகவும் இஸ்ரேல் ஆதரவு நிலையை இந்தியா பெரும்பாலும் எடுத்தது என்பது கடந்த காலத்தில் இந்தியா எடுத்து வந்த பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைக்கு முற்றிலும் எதிரானதாகும். டிரம்ப், மோடி சந்திப்பு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு குதூகலமாக இருக்கக்கூடும். ஆனால் இந்தியாவை அமெரிக்கா மேலும் மேலும் சுரண்டுவதற்கே அது வழிவகுக்கும்.