கோயம்புத்தூர், ஜன.10- சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார். “மாற்று அரசியலை முன்வைக்கும் இடதுசாரி மாடல்தான் உலக அளவில் வெற்றி பெற்ற மாட லாக இருக்கிறது. சினிமாவில் தியாகி வேடம் போடுபவர்கள், மேடையில் மட்டும் பேசுபவர்கள், ஆணவக் கொலை வழக்கில் சிறைக்குச் செல்பவர்கள் என பலரும் தியாகி என அழைக்கப் படுகிறார்கள். ஆனால் உண்மையான தியாகம் என்றால் என்ன என்பது பலருக்கும் தெரிய வில்லை” என்றார். “குடும்ப நலனையும் தாண்டி மக்கள் நலனுக் காக களமாடும் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை விட வேறு எதை தியாகம் என்று சொல்ல முடியும்? அநீதி நடக்கும் இடங்களில் கடவுள் வருவாரோ இல்லையோ, செங்கொடி நிச்சயம் வரும் என்பதை உலக வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார். கல்வி, பொருளாதாரம் குறித்தும் அவர் பேசினார். “யுஜிசி அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்க கமிட்டியை ஆளுநரே உரு வாக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கருத்தியலை கொண்ட வர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்படு வார்கள்” என்று கவலை தெரிவித்தார். “உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ளது. இதற்கு மாற்றாக அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு அதிக வரி விதித்து வருவாயை பெருக்கலாம். ஆனால் அரசு அதை செய்ய மறுக்கிறது” என்று விமர்சித்தார். கூட்டணி அரசியல் குறித்து பேசுகையில், “தேர்தல் கூட்டணியில் இருப்பதற்காக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்க முடி யாது. சில விஷயங்களில் திமுகவுடன் ஒத்து ழைப்போம், சில விஷயங்களில் வேறுபடுத்திக் காட்டுவோம். தொழிலாளர், விவசாயிகள் பிரச்சினைகளில் சமரசமின்றி போராடுவோம்” என்று தெளிவுபடுத்தினார். “பாஜகவை எதிர்ப்பதிலும், அவர்களுடன் சேர்ந்து வருபவர்களை வீழ்த்துவதிலும் எந்த தயக்கமும் சமரசமும் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. மாற்று அரசியலை முன்வைக்கும் இடதுசாரி மாடல்தான் இந்தியாவிற்கான மாடல்” என்று உறுதிபட தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் சிபிஐ சூலூர் வடக்கு செயலாளர் பி.எஸ்.ராமசாமி தலைமையில், சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் ஏ.சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனக ராஜ், சிஐடியு ஆர்.ராஜன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் த.லெனின், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சி.தங்கவேல் ஆகியோர் பங்கேற்றனர்.