tamilnadu

img

ஜன.22 - போக்குவரத்து தொழிலாளர்கள் சிறை நிரப்பும் போராட்டம்

சென்னை, ஜன. 10 - அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி  22 அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ள தாக சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராசன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பதுடன், மறைமுகமாக தனியார் மயம், ஒப்பந்த முறை நியமனத்தை கைவிட வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர் களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும். 10 வருடங் களாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதி யர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீட்டை வழங்க வேண்டும்; தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களைப் நிரப்ப வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜன.9) பல்லவன் இல்லம் முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்  சம்மேளனம் (சிஐடியு) நடத்திய இந்தப் போராட்டத்தை நிறைவு செய்து பேசிய அ.  சவுந்தரராசன், “போக்குவரத்து தொழிலாளர் களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 5 முறை  வேலைநிறுத்தப் போராட்டம், தர்ணா, உண்ணா நிலை, மறியல் என பல கட்ட போராட்டங்களை 10 வருடமாக நடத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கு மேலும் எப்படி பொறுமை காக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.