districts

img

மாமல்லபுரத்தில் சர்வதேச பலூன் திருவிழா பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

மாமல்லபுரம், ஜன.10- மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பலூன் திருவிழாவில் பல்வேறு நாடு களைச் சார்ந்த பங்கேற்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழாவின் தொடக்க விழா வெள்ளியன்று (ஜன.10) நடைபெற்றது. இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தனர். 10ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரையில் என மூன்று நாட்கள் தொடர்ந்து நடை பெற உள்ளது. இதில், பிரேசில், ஆஸ்தி ரேலியா, ஐரோப்பா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடு களில் இருந்து 20க்கும் மேற்பட்ட ராட்சச பலூன்களை பறக்க விடும் வல்லுநர்கள் வந்துள்ளனர். புலி மற்றும் பொம்மை வடிவங்களில் வண்ண, வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், மாமல்லபுரத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த பலூன் திருவிழாவை காண, பொது மக்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர். மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையில் பலுன்கள் பறக்கவிடப்படும். மேலும், பலுன் திருவிழா நடைபெறும் வளாகத்துக்குள் செல்ல12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனு மதியும் பெரியவர்களுக்கு ரூ.200 கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவு சீட்டை ஆன்லைன் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்க ளில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.