districts

img

பி.என்.உண்ணி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

சென்னை மாவட்ட மூத்த தொழிற்சங்க தலைவரும், சிபிஎம் முன்னணி தலைவருமான தோழர் பி.என்.உண்ணி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் கட்சியின் அம்பத்தூர் பகுதிக்குழு சார்பில் வியாழனன்று (ஜன. 9) விபிசி நினைவகத்தில் பகுதிச் செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எல்.பி.சரவணத்தமிழன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை, நிர்வாகிகள் சி.சுந்தரராஜ், சு.பால்சாமி, கே.ரவிச்சந்திரன், கே.கிருஷ்ணசாமி, முரளி, இ.பாக்கியம், அ.ராயப்பன் ஆகியோர் பேசினர். உண்ணியின் மகள் பி.யு.சுனிதா நன்றி கூறினார்.