சிஐடியு நடத்தும் அயனாவரம் நிர்மல் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் வெள்ளியன்று (ஜன.10) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் கும்மியாட்டம், கோலப்போட்டி, உறியடித்தல் நிகழ்ச்சிகளோடு உற்சாகமாக நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளியின் செயலாளர் அ.சவுந்தரராஜன், நிர்வாகிகள் பூபாலன், நாராயணன், பெருமாள்சாமி, டில்லிபாபு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.