புதுச்சேரி அரசு, பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின்கீழ் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வெள்ளியன்று சட்டப்பேரவையில் வழங்கினார். உடன் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக்கல்வி இயக்குநர் பிரியர்தர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.