கொள்முதலுக்கான நெல் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்!
பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை, நவ. 18 - தமிழ்நாட்டில் குறுவைப் பருவ நெல் உற்பத்தி, சாதனை அளவை எட்டியுள்ள நிலையில், விவசாயி களின் நலன் கருதி நெல் கொள் முதலுக்கான ஈரப்பத அளவை 17 சத விகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குறுவைப் பருவத்தில், கடந்த ஆண்டு 4.81 லட்சம் மெட்ரிக் டன் னாக இருந்த நெல் கொள்முதல், இந்த ஆண்டு 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. 1,932 நேரடி கொள் முதல் நிலையங்கள் மூலம் 1.86 லட்சம் விவசாயிகளிடமிருந்து ரூ. 3,559 கோடி மதிப்பில் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரப்பத அளவு தளர்வை விரைவில் அளிக்க வேண் டும் என கடிதத்தில் முதலமைச்சர் வலி யுறுத்தியுள்ளார். கடந்த அக்டோபர் 19 அன்று இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு மூன்று குழுக்கள் ஆய்வு மேற்கொண்ட போதிலும், இதுவரை உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்பதைக் கடி தத்தில் சுட்டிக்காட்டியுள்ள முத லமைச்சர், செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந் திய மாநிலங்களுக்கு வழங்கவும், சோதனைக் காலத்தை 12 நாட்களி லிருந்து 7 நாட்களாக குறைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
