tamilnadu

img

மணிப்பூரில் குக்கி பழங்குடிகள் 11 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட கொடூரம்!

இம்பால், நவ. 11 - மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள சிஆர்பிஎப் முகாம் மீது குக்கி பழங்குடியைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 பேரை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் காயமடைந்ததாகவும், அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு, தனது வாக்குவங்கி அரசியலுக்காக மெய்டெய் பிரிவு மக்களை பழங்குடி களாக அறிவிப்பதாக வாக்குறுதி அளித்தது, அங்கு ஏற்கெனவே குக்கி  பழங்குடி பிரிவினரிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியது. பாஜக அரசின் அறிவிப்பு, மலைவளத்தை சூறை யாடும் சூழ்ச்சி கொண்டது என்று குக்கி  பழங்குடிகள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுக்குப் போட்டி யாக மெய்டெய் பிரிவினரை பாஜக தூண்டிவிட்டது.  இதில், கடந்த ஆண்டு 2023 மே  மாதம் முதல் மணிப்பூரில் மெய்டெய் மக்களுக்கும், குக்கி பழங்குடி களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் தற்போது வரை, இருதரப்பிலும் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர் களாக ஆக்கப்பட்டுள்ளனர். இப் போது வரை மணிப்பூர் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், ஜிரிபாம் மாவட்டத்தின் போரோபெக்ராவில் உள்ள காவல் நிலையம் மீது, திங்க ளன்று பிற்பகல் 2.30 மணியளவில் குக்கி பழங்குடியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது பதில் நடவடிக்கையாக சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் குக்கி பழங்குடியைச் சேர்ந்தவர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மணிப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது.