நாகர்கோவில், மே 31-குமரி மாவட்டம், செண்பகரா மன்புதூர்பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (65).இவருக்கு சொந்தமாக பொய்கை அணை அடிவாரத்தில் முந்திரி தோட்டம் உள்ளது.தற்போது முந்திரி பழம் சீசன் என்பதால்தேவசகாயம், வெள்ளியன்றுகாலை தனது தோட்டத்துக்கு சென்று முந்திரி பழங்களை சேகரிக்க சென்றார். அப்போது அணையின் அடிவார பகுதியில் இருந்து வந்த கரடி, தேவசகாயம் மீதுபாய்ந்து அவரை சரமாரியாக தாக்கியது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார்.அலறல் சத்தத்தை கேட்ட தோப்பிலுள்ள நாய்கள்கூட்டம் கரடி மீது பாய்ந்து சண்டையிட்டது. இதை பயன்படுத்தி, கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்த தேவசகாயத்தை மீட்ட ஊழியர்கள், அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட வனத்துறை மற்றும் காவல் துறைஉயர் அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.