வெண்மணி தியாகிகள் 57-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிப்பு!
நாகப்பட்டினம், டிச. 24 - வீரஞ்செறிந்த வெண்மணி தியாகி களின் 57-ஆம் ஆண்டு நினைவு தினம், வியாழனன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு, தியாகிகள் நினைவிடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்துகின்றனர். அரைப்படி நெல் கூலி உயர்வுக் கேட்டதற்காகவும், சாணிப்பால், சவுக்கடி, சாதிய ஒடுக்குமுறையி லிருந்து தங்களைப் பாதுகாக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், செங் கொடியையும் விட்டுத்தர மாட்டோம் என்று முழங்கியதற்காக, 1968-ஆம் ஆண்டு, வெண்மணி கிராமத்தில், பெண்கள், குழந்தைகள் என 44 விவ சாயக் கூலித் தொழிலாளர்கள் ஆண்டைகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். தமிழகத்தை மட்டுமல்லாது, நாட்டையே உலுக்கிய இந்த கொடூரம், பண்ணையடிமைத்தனத்தின் கொடுமையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதுமுதல், விவ சாயத் தொழிலாளர்கள் நடத்திய வர்க்கப் போராட்டத்தின் நினைவுச் சின்னமாக வெண்மணி விளங்கி வருகிறது. அதன்படி வெண்மணி தியாகி களின் 57-ஆம் ஆண்டு நினைவஞ்சலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை (டிச. 25) அன்று, நாகை மாவட்டம் வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நடைபெறு கிறது. மாவட்டச் செயலாளர் வி. மாரி முத்து தலைமையிலான இந்நிகழ்ச்சி யில், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செங்கொடியை ஏற்றி வைக்கிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ. சவுந்தர ராசன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் கே. பாலபாரதி உள்ளிட்ட தலைவர் கள் அஞ்சலி செலுத்துகின்றனர். கீழ்வே ளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். முத்தையன் நன்றி கூறுகிறார்.
