7 நாட்கள் தொடர் போராட்டம் வெற்றி செவிலியர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக தமிழக அரசு உறுதி!
மதுரை, டிச. 24 – பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த செவிலியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. கோரிக்கைகளை ஏற்பதாக தமிழக அரசு அளித்த உறுதிமொழி யை ஏற்று, போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில பொதுச்செயலாளர் நே. சுபின் அறிவித்தார். மதுரையில் புதனன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “எங்களின் பிரதான கோரிக்கை யான பணி நிரந்தரம் தொடர்பான தாகும். அதன்படி தற்போது பொங்கலுக்கு முன் 1,000 செவி லியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதற்கான பட்டியலும் இன்று கேட்கப்பட்டு, நிதித்துறையின் ஒப்புதலும் பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இதுவரை வழங்கப் படாமல் இருந்த மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட நலன்கள், பொங்க லுக்கு முன் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப் பட்ட ரூ. 14,000 தொகுப்பூதியம், அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் செவிலியர்களுக்கு ரூ. 18,000 ஆக உயர்த்தப்பட்ட தினத்தி லிருந்து முன்தேதியிட்டு அரிய ராக வழங்கப்படும் எனவும் வாக்கு றுதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிபுரிந்து பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களில் மீதமிருந்த 724 பேரும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 724 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் உறுதியாகியுள்ளது. அதேபோல், காலியாக இருந்த நர்சிங் சூப்பர்வைசர் கிரேட்–2 (266 பணியிடங்கள்), செவி லியர் போதகர் (146 பணியிடங் கள்) ஆகியவை உடனடியாக கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். 37 கிரிட்டிக்கல் கேர் கட்டடங்களில் புதிய நிரந்தர பணியிடங்கள் உரு வாக்கப்படுவதுடன், சுமார் 8,000 தொகுப்பூதிய செவிலியர்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படும் எனவும் அரசு உறுதி அளித்துள்ளது. இன்று நடைபெற இருந்த கலந்தாய்வு, செவிலியர்கள் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை கார ணமாக அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாள் போராட்டக் காலத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது எந்த வித பழிவாங்குதல் நடவடிக்கை யும் எடுக்கப்படாது, சம்பள பிடித்த மும் செய்யப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் போராட்டத் தின் போது கைது செய்யப்பட்டு வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட காரணத்தால் நேரடி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இயலாத நிலையில், கூகுள் மீட் (Google Meet) மூலம் காணொலி வழியாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடி வடைந்தது. இதனை தொடர்ந்து, எங்களின் தொடர் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதி, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.” இவ்வாறு நே. சுபின் தெரிவித் தார். செய்தியாளர் சந்திப்பின் போது சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் சி. க. சுஜாதா, வினோ தினி, மதுரை மாவட்டத் தலைவர் ராஜி, செயலாளர் தாமரைச் செல்வி, துணைத் தலைவர் பிரேமலதா, பொருளாளர் டெய்சி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் க. நீதி ராஜா, மாவட்டத் தலைவர் இரா. தமிழ், செயலாளர் க. சந்திர போஸ் ஆகி யோர் உடன் இருந்தனர் போராட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச்செய லாளர் ஆ. செல்வம் பேசினார்.
