‘அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி’ அமைச்சர்
அன்பில் மகேஸ் தகவல் திருச்சிராப்பள்ளி, டிச. 24 - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளனர். ஜனவரி 6ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதலமைச்சர் தெரிவிப்பார். ஒன்றிய அரசு நமக்கான நிதி கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெளிவாகக் கூறியுள்ளோம். இருந்தபோதிலும் அவர்களுக்கான நல்ல செய்தி நிச்சயம் வரும்” என்றார்.