நூறுநாள் வேலைத் திட்டத்தை சிதைக்கும் மோடி அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, டிச.24- நூறுநாள் வேலைத் திட்டதில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதோடு, திட்டதையே சீர்குலைக்கும் வகையில் மாற்றியமைத்துள்ள ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி்டி கட்சிகளின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்டசெயலாளர் கே,கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பெனட் அந்தோணிராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ மாவட்டச் செயலாளர் த. செங்கோடன், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி, விசிக சார்பில் விடுதலை வேந்தன், வாழ்வுரிமை கட்சி முகமதுகனி, மக்கள் நீதி மையம் பார்த்திபன், திக சார்பில் அறிவொளி, விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் டி.சலோமி, சி.மாரிக்கண்ணு, சிபிஎம் சார்பில் சு.மதியழகன், கே.முகமதலிஜின்னா, எஸ்.பாண்டியன், செந்தில்ராஜ், பி.சுசிலா, எஸ்.பாண்டிச்செல்வி, டி.காயத்ரி உள்ளிட்டோர் உரையாற்றினர். கந்தர்வகோட்டையில் திமுக ஒன்றியச் செயலாளர் எம்.பரமசிவம் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன், காங்கிரஸ் சார்பில் மாயக்கண்ணு, சிபிஎம் சார்பில் வி.ரெத்தினவேல், ஜி.பன்னீர்செல்வம், எஸ்.நாராயணசாமி, சிபிஐ சார்பில் உ. அரசப்பன், ராஜேந்திரன், விசிக சார்பில் விடுதலைவளவன், மதிமுக சார்பில் வைரமூர்த்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். குன்றாண்டார்கோவிலில் திமுக ஒன்றியச் செயலாளர் ச.சண்முகம் தலைமையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், திமுக சார்பில் வெங்கடாசலம், சேட், மதிமுக சார்பில் மதியழகன், சிபிஎம் சார்பில் கலைச்செல்வம், பெருமாள், சிபிஐ சார்பில் நடராஜன், விசிக சார்பில் யோகராஜன் உள்ளிட்டோர் பேசினர். திருவரங்குளத்தில் ஞான.இளங்கோவன் தலைமையில் திமுக சார்பில் கே.பி.கே.டி.தங்கமணி, அரு.வடிவேல், காங்கிரஸ் சார்பில் மணிகண்டன், சிபிஎம் சார்பில் த.அன்பழகன், கி.ஜெயபாலன், எல்.வடிவேல், ஆ.குமாரவேல், சிபிஐ சார்பில் மு.மாதவன், தமிழ்மாறன், விசிக சார்பில் அம்பேத்கர்வளவன், மதிமுக சார்பில் சுரெஷ், திக சார்பில் மணியரசன் உள்ளிட்டோர் உரையாற்றினார். கறம்பக்குடியில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் தலைமையில் திமுக சார்பில் கீரை.தமிழ்ராஜா, வி. முத்துகிருஷ்ணன், தவ.பாஞ்சாலன், சிபிஎம் சார்பில் ஏ.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பேசினர். அன்னவாசலில் திமுக ஒன்றியச் செயலாளர் கே. சந்திரன் தலைமை வகித்தார். திமுக சார்பில் மாரிமுத்து, பழனியப்பன், காங்கிரஸ் சார்பில் சுப்பிரமணியன், சிபிஎம் சார்பில் எம்.ஆர். சுப்பையா, எஸ்.ரகுபதி, சிபிஐ சார்பில் கே.ஆர். தருமராஜன் உள்ளிட்டோர் பேசினர். திருமயத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் ஏஎல். சுப்பிரமணியன் தலைமையில் திமுக சார்பில் ஆ. சிதம்பரம், கணேசன், காங்கிரஸ் சார்பில் இராம.சுப்புராம், சிபிஎம் சார்பில் ஜி.நாகராஜன், ஜெ.வைகைராணி, சிபிஐ சார்பில் சின்னாண்டி உள்ளிட்டோர் கண்னட உரையாற்றினர். அரிமளத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் பொன்.ராமலிங்கம் தலைமையில் திமுக சார்பில் இளையராஜா, காங்கிரஸ் சார்பில் இப்ராஹிம், சிபிஎம் சார்பில் ஆர்.வி.ராமையா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். விராலிமலையில் திமுக விவசாய அணி துணைத் தலைவர் த.சந்திரசேகரன் தலைமையில், திமுக சார்பில் கே.என்.ஆர். போஸ், சத்தியசீலன், இளங்குமரன், சிபிஎம் சார்பில் கே. சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். திருவாரூர் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் சிபிஐ மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா. முத்தரசன் உரையாற்றினார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, பா.கோமதி, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா, நகரச் செயலாளர் எம்.டி. கேசவராஜ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடவாசல் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் டி. முருகையன் தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர்கள் பா. பிரபாகரன், எஸ். ஜோதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி கண்டன உரையாற்றினார். இதில், சிபிஎம் குடவாசல் ஒன்றியச் செயலாளர்கள் டி.லெனின்(தெற்கு), கே.தமிழ்ச்செல்வி(வடக்கு), குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி. சேகர் மற்றும் சிபிஐ, விசிக கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள், நிர்வாகிகள்,தோழர்கள் பங்கேற்றனர் கொரடாச்சேரி கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.பாலச்சந்தர் தலைமை வகித்தார். திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் அருண்காந்தி கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கே.ஆர். ஜோசப், விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டலச் செயலாளர் சீமான் மகேந்திரன், சிபிஎம் கே. கோபிராஜ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். வலங்கைமான் வலங்கைமான் கடைவீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றியச் செயலாளர்கள் வி. அன்பரசன், ஜி. தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ். கேசவராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ச. இளங்கோவன் மற்றும் சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நன்னிலம் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக ஒன்றியச் செயலாளர் வே. மனோகரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் ஐ. முகமது உதுமான் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் அய்யா ராசு தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலர்கள் அம்மாப்பேட்டை வடக்கு சுரேஷ் குமார், தெற்கு குமார், அம்மாப் பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன், மார்க்சியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன், இந்தியக் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் குமார், சிபிஐ எம்.எல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா, மாநகர் மாவட்ட செயலாளர் கோ.வி. வெற்றிச்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகக் குழு சுரேஷ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்தநல்லூர் ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அஜித், முருகன் மணிகண்டம் ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளர் ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். திருச்சி புறநகர் மாவட்டம் முசிறியில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் அசோக், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் நல்லுசாமி, திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமிநடராஜன், ஒன்றியச் செயலாளர்கள் உள்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கரூர் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பி. ஜீவானந்தம், ஆர். ஹோச்சுமின், எம். சுப்பிரமணியன், எம். தண்டபாணி, கெ. சக்திவேல், ப.சரவணன், சதீஷ் மற்றும் திமுக ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்டனர். க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக க.பரமத்தி வடக்கு ஒன்றியச் செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.கந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் கே.குமாரசாமி, மதிமுக சண்முகம், விசிக ஜெயராமன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் மணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஆர். ராஜாமுகமது, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி. கணேசன், ஒன்றியச் செயலாளர் எம். ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தோகைமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தோகைமலை ஒன்றியச் செயலாளர் ராமர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சத்திவேல், ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கடவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர்கள் சுதாகர், செல்வராஜ், ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ராமமூர்த்தி, பி. வேல்முருகன், ஒன்றியச் செயலாளர் பி. பழனிவேல், விசிக அவிநாசி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார் திமுக ஒன்றிய செயலாளர் பா.பிரகாஷ், திமுக நகரச் செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மலர் வண்ணன், சிபிஎம் மாநில விவசாய சங்க துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன், அப்துல் அஜீஸ், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு செல்வம், ஒன்றியச் செயலாளர் மாசே துங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அருட்செல்வன், ஒன்றியச் செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார், அப்துல்மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமை வகித்தார், தெற்கு ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து, நகரச் செயலாளர் அழகப்பன் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நல்லதம்பி, குமார், பாண்டியன், மதியரசி, விதொச ஒன்றியச் செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
