tamilnadu

வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

பெரம்பலுார், டிச.24-  பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 485 பேர் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராம மக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், “ஆலத்தூர் தாலுகா, சில்லக்குடி கிராமத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கல் பாதையை தனி நபர் குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.  இதனால், மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.