tamilnadu

நல்லகண்ணுவை சந்திப்பதைத் தவிர்க்க வேண்டுகோள்!

நல்லகண்ணுவை சந்திப்பதைத் தவிர்க்க வேண்டுகோள்!

சென்னை, டிச. 24 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவை, நேரில் சந்திப்பதைக் கட்டாயமாக தவிர்க்குமாறு என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் இரா. நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் ‘டிசம்பர் 26’ அன்று கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனிடையே, மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், ஆர். நல்லகண்ணு வீட்டில் மருத்துவக் கண்காணிப்பில் ஓய்வில் இருந்து வருகிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் அருகில் சென்று அவரோடு உரையாட அனுமதிப்பதில்லை. எனவே, தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அவரை நேரில் சந்திப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.